'பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமருவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று கூறிய பாரதியார் இன்று இல்லாவிடினும் அவர் கூறிய கருத்து உண்மையாகிவிட்டது.
பெண் விடுதலை இல்லாத காலத்தில் பாரதியார் பாடிய பாடல்கள் பெண்விடுதலையை வேண்டுவனவாக இருந்தன. ஆனால் இன்றைய காலத்தில் பாரதியார் இருந்திருந்தால் பெண் விடுதலை பற்றி பாடியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது
பெண்கள் கால்தடம் பதிக்காத துறையே இன்று இல்லை என்று கூறும் அளவுக்கு பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். யுhழ் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அரசஅதிபர், துணைவேந்தர், யாழ் மாநகர மேயர், வைத்தியசாலை பொறுப்பதிகாரி போன்றோரும் புலம் பெயர் தமிழ்ப் பெண்ணாகிய ராதிகா சிற்சபேசன் ஆகியோரின் சாதனைகள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுக்கள்.
இயந்திரங்களின் வளர்ச்சி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க அதே வேகத்துடன் பெண்களும் தமது வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு ஊடகத்துறையிலும் அரயசியல்துறையிலும் தான் பெண்களின் ஈடுபாடு குறைவாக இருந்தது. ஆனால் ஊடகத்துறையை பொறுத்தவரையில் இந்தக் கூற்று பொய்யாகி விட்டது. ஊடகத்துறையில் இன்று அதிகமான பெண்கள் காலடி எடுத்து வைத்துள்ளார்கள்.
ஊடகத்துறையில் பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும்?....... 'சேற்றுக்குள் மலர்ந்த செந்தாமரையல்லவா பெண்'
நிலத்துக்குள் கீழ் இருக்கும் வைரம் மேலே வந்தவுடன் எவ்வாறு ஜொலிக்கின்றதோ அதுபோல தான் பெண்களும் அடக்கப்பட்ட நிலையில் இருந்து இன்று முன்னேறி இந்த உலகத்தில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எழுத்துலகில் சாதனை படைத்து இன்றும் உலகின் பார்வையை தன்பால் ஈர்த்து வைத்துள்ள அருந்ததிராயே பெண்கள் எழுத்துலகிலும் சாதனை படைப்பதற்கு சிறந்த உதராணம். வருகின்ற காலங்களில் எழுத்துலகில் சாதனை படைக்க துடிக்கும் பெண்களுக்கு அடித்தளமும் இவரே.
ஆரம்ப காலத்தில் பெண்கள் கைத்தொழில் செய்து வந்தார்கள் ஆண்கள் வெளியில் வேட்டையாடுபவராகவே திரிந்துள்ளனர். காலப்போக்கில் இது மாற்றம் அடைந்து ஆண்கள் தங்கள் சுயநலம் கருதி பெண்களின் பொருளாதாரம் இவைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமக்கு அடங்கி நடக்கவும் பிறந்தார்கள் என்ற கருத்தை சமூகத்தில் தோன்றச் செய்து பெண்களை ஒடுக்கினர் என்று எழுத்தாளர் 'நா.கந்தையா' தமது 'பெண்களும் சமூகமும்' என்ற நூலில் குறிப்பிட்டு இருந்தார்..... ஆனால் இன்று இக் கருத்து மாற்றம் அடைந்துள்ளது. இலங்கையை பொறுத்தவரை பெண் ஒருவர் ஆட்சி செய்துள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிந்ததே..... ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.
எல்லாத்துறையிலும் முத்துப்போல ஜொலிக்கும் பெண்கள் அரசியலில் மட்டும் அதிகமாக உள்வராமல் இருக்கின்றனர். அரசியல் துறையிலும் பெண்கள் தமது ஆர்வத்தைக் காட்டி வரவேண்டும்.
'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்' என்ற பாரதியாரின் கூற்றுக்கு இணங்க பெண்ணாய் பிறந்ததற்கு பெண்கள் பெருமைப்படவேண்டும். s
No comments:
Post a Comment