flashvortex.

Sunday, May 6, 2012

சமூகத்தினால் தன்னிலை இழந்த தப்பாட்டம்



காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் 'பழையன களைதலும் புதியன புகுதலும்' என்ற முதுமொழி  தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது.  இதற்க்கு பறை சிறந்த எடுத்துக்காட்டு.பறை தமிழர்களின் பாரம்பரிய கலை ஆகும். இப் பாரம்பரிய கலை இன்று சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லோராலும் தாழ்த்திப் பார்க்கப்பட்டு வருகின்றது. இப் பறையை  தப்பாட்டம் என்று அழைப்பர்.



இன்றைய தலைமுறைக்கே பறை பற்றி அதிகமானவர்களுக்கு  தெரியாது. அப்படி இருக்க இனி வரும் தலைமுறைக்கு எப்படி தெரியும். இதற்கு காரணம் சமுதாயம் மட்டுமே! பறை என்பது ஒரு கலை. இந்தக்கலையை தெரிந்திருப்பவர் எல்லா வாத்திய கலையையும் வாசிக்க தெரிந்திருப்பான்.
ஆரம்ப காலத்தில் இப்பறை எல்லோராலும் மதிக்கப்பட்டே வந்தது. இப் பறை சமூகம் சார்ந்த கலையாகும். இது போர் ஆரம்பிக்கபட போகுது என்றால் எல்லோருக்கும் தெரிவிக்க பயன்பட்டது. ஆதிகால மனிதர்கள் வேட்டையாடுவதையே தொழிலாக செய்து வந்தனர். வேட்டையாடிய பின்பு ஓய்வாக இருக்கும் நேரங்களில் விலங்குகளின் தோல்களை கொண்டே பறையை செய்தனர். விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையினை அடித்து ஒலியை எழுப்பி துரத்தி தம்மை பாதுகாத்து கொண்டனர். இது மட்டுமல்லாது ஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் இருப்பவர்களை அழைப்பதற்கும் பறையை பயன்படுத்தி உள்ளனர்.

விலங்குகளைக் கொன்றுஇ தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்துஇ காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும்இ வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறிஇ திருமணம்இ இறப்புஇ சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் கலையாகியது.

இவ்வாறு ஆதிகாலத்தில் முக்கியமாக இருந்த கலை இன்று மதிக்கப்படாமல் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சமுதாயம் என்றால் மிகையாகாது. பறை அடிப்பவர்களை என் இந்த சமூகம் இழிவாக பார்க்கின்றதோ?

பறை செய்வதற்கு வேம்பு மாட்டுத் தோல் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தெருவோரங்களில் இருக்கின்ற வேப்ப மரங்களையே அதிகம் பயன்படுத்துவர். இதற்கு காரணம் பறை அடிக்கும் போது அதிலிருந்து சத்தம் அதிகமாக வெளிவர வேண்டும் என்பதற்காக.... வீதிகளில் இருக்கும் மரங்கள் வாகனச் சத்தங்களை அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும். இதனால் பறை அடிக்கும் போது அதிகமான சத்தம் வெளியில் வரும். இதற்காகத் தான் பறை செய்வதற்கு தெருவோர மரங்களை பயன் படுத்துகிறார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.

பறை அடிப்பவர்களை இந்த சமூகம் சாதியின் பெயர் சொல்லி ஒதுக்க ஆரம்பித்தது. இதன்படி ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய  சமூகம்இ அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தைஇ சாவுமேளம் என என முத்திரை குத்தியது. இப்படியே காலம் செல்ல செல்ல சாதி குறியீடாக மாறியது. அச்சமூகத்தின்  இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது. ஆனால் சாவு வீடுகளில் பறை அடிப்பார்கள் வெட்டியான் என்றே அழைக்கபடுவர். பறை அடிப்பவர்கள் எல்லோரும் வெட்டியான் அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இக்காலகட்டத்தில் தான்  சமூகத்தினால் தாழ்த்தப்பட்ட கலைக்கு புத்துயிர் கொடுத்தவர் தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடலரசு வேணுகோபாலன். இவர் தன் கிராமத்தில் பட்டாதாரியாகி சட்டதரணியாகவும்  ஊடகவியலாளாளனாகவும்  கலைஞனாகவும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார். அதுமட்டும் அன்றி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து இவ் தப்பாட்டத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தவர்.  இத்தகைய கலைஞர்கள் இருக்கும் வரை பாரம்பரிய கலைகள் அழியாமல்  அடுத்த சந்ததியையும் சென்றடைந்து அவர்களும் இக்கலையை கற்றுக் கொள்வார்கள்

இனிவரும் காலங்களில் பறை சாதி ஒடுக்கு முறையில் இருந்து விடுபட்டு ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போல இருப்பதற்கு இந்த சமூகம் பறை பற்றிய தப்பான அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நாட்டார் கலை என்பது குறித்த ஒரு சமூகத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஆனால் இன்று நாட்டார் கலையை அறிந்து இருப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். நாட்டார் கலையை அறிந்த மக்கள் குறைவாக இருந்தாலும் நாட்டார் கலை இன்னும் முற்றாக அழியவில்லை.                                                                          
                                                                                                                                   

No comments:

Post a Comment