flashvortex.

Wednesday, March 28, 2012

இந்தியா, சீனா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்கா விரைவில் முடிவு

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை சந்தேகித்து வரும் அமெரிக்கா, சர்வதேச அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்த, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக, சமீபத்தில் தெரிவித்தது.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட், நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளிடம், இறக்குமதியை குறைப்பது குறித்து பேசி வருகிறோம். இதில், இறுதி முடிவு எடுப்பதற்கு இன்னும், 180 நாட்கள் உள்ளன. அதுவரை, அந்நாடுகளிடம் தொடர்ந்து பேசுவோம்.ஜூன் மாத இறுதிக்குள் அந்நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் முடிவெடுப்பார்.இவ்வாறு நுலண்ட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment