flashvortex.

Friday, March 30, 2012

சிறீலங்காவை மீண்டும் எச்சரித்துள்ளோம் : அமெரிக்கா தெரிவிப்பு


சிறீலங்காவில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்குஇ கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

19வது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுகள் தொடர்பிர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறிலங்காஇ ஈரான்இ யேமன்இ லிபியாஇ சிரியாஇ பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.



இந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது-

“உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அதற்கு உதவ அனைத்துலக சமூகம் தயாராகவே உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும்இ பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும்இ புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு சிறிலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது“ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment