flashvortex.

Tuesday, March 27, 2012

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்கும் சிறீலங்கா


சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாடு என்ற ரீதியில் பிரேரணையின் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அமெரிக்கா உள்ளிட்ட வலுவான நாடுகளின் தேவைகளுக்காக இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டாலும், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்திருந்தது.

ஜெனீவா பிரேரணையின் மூலம் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது எனவும், அதன் பரிந்துரைகள் உள்நாட்டு ரீதியாக அமுல்படுத்தப்பட வேண்டியவை எனவும் அவர் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment