flashvortex.

Friday, March 23, 2012

விற்பனைக்கு தயாராகும்மைக்கேல் ஜாக்சன் வீடு

பிரபல பாப் இசை பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் வீடு, விற்பனை செய்யப்பட உள்ளது.அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், 2009ம் ஆண்டு, அதிக போதை மருந்தை உட்கொண்டதன் காரணமாக மரணமடைந்தார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பிவேர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் தான், இவர் கடைசியாக வசித்தார்.ஏழு படுக்கை அறைகளும், 13 கழிப்பறைகளும், ஏழு கார் நிறுத்தும் இடங்களும் கொண்ட இந்த வீடு, தற்போது விற்பனை செய்யப்பட உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 17,000 சதுர அடி கொண்ட இதே வீடு விற்பனைக்கு வந்தது. 

ஆனால், சில காரணங்களால் இந்த வீடு விற்பனை செய்வது தள்ளிப் போடப்பட்டது.ஆனால், வீட்டிலிருந்த ஓவியங்கள், விளக்குகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை, கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்த வீடு, மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. 23.9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த வீடு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வீட்டில் முன், மர்லின் மன்றோ உள்ளிட்ட பிரபலங்களும் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment