flashvortex.

Saturday, March 31, 2012

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு


தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த உயர்வுஇ வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்ட இந்த மின் கட்டண உயர்வுஇ சுமார் 40 முதல் 50 சதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.



வீடுகளுக்கான மின் கட்டணம்

முதல் 100 யூனிட்டுகள் வரைஇ ஒரு ரூபாய் 10 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ஒரு ரூபாய் 80 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
201 முதல் 250 யூனிட் வரை 3 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
251 முதல் 500 யூனிட் வரை 3 ரூபாய் 50 காசாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட்டுகளுக்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

வீடுகளுக்கான உயர்வுஇ 37 சதம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கும் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிகளுக்கு முதல் 500 யூனிட்டுகள் வரை கட்டணம் இல்லை. 500 யூனிட்டுக்கு மேல் தலா 4 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

குடிசைத் தொழில் மற்றும் சிறுதொழிகளுக்கு 100 யூனிட்டுகள் வரை 3 ரூபாய் 50 காசாகவும்இ அதற்கு மேல் 4 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிற தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ஐந்தரை ரூபாய் வசூலிக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும்இ தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தனித்தனி மின் கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மின் கட்டண உயர்வின் மூலம்இ தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment