flashvortex.

Friday, March 23, 2012

ஆபிரிக்கா நாடான மாலியில் புரட்சி - அரசை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

ஆபிரிக்கா நாடானா மாலியில் அந்நாட்டின் அரசை கைப்பற்றியுள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து பிரிந்து சென்றவர்களே இவ்வாறு புரட்சியில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.

மேலும் மாலியில் அரசியலமைப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க நிறுவனங்கள் கலைக்கப்பட்டள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் இன்று தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளர்ச்சிக்காரர்கள் தலைநகர் பமாகோவிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியதுடன் மேலும் பல அமைச்சர்களையும் கைது செய்துள்ளதாகவும் எனினும் அந்நாட்டு ஜனாதிபதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ஏ.எவ்.பி. செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment