flashvortex.

Friday, March 30, 2012

விடுதலைப் புலிகளின் வீரத்தை பறைசாற்றும் ரஷ்ய ஏவுகணைகள்


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்ட பல வெற்றிகளுக்கு விமானப்படை தாக்குதலே காரணமாக அமைந்துள்ளது.

இக்கொடிய அரக்க விமானங்களின் தாக்குதலில் பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பல கோடி பெறுமதியான சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன.

இவ்வாறு நாசம் செய்யும் விமானங்களை தாக்கி அழிக்க விடுதலைப் புலிகளினால் பிரத்தியேக தாக்குதல் அணி உருவாக்கப்பட்டிருந்து. குறித்த படையணி சிறீலங்கா வான்படையினருக்கு பல வகையிலும் அச்சுறுத்தலாகவே இருந்துள்ளனர். இதுவரை சுமார் 8 விமானங்கள் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.



விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் படையணி குறித்த பல ரகசியங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. அவை வருமாறுஇ

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி எண்டனோவ் விமானத்தை தாக்கிய அழிந்த இரண்டு பேரினை கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

குறிந்த சந்தேக நபர்கள் மேலும் இரண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் வில்பத்து வனத்தில் மறைத்திருந்து இவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சிறீலங்கா விமானப்படையினருக்கு சொந்தமான உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களைஇ ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகளை கொண்டே விடுதலைப்புலிகள் அழித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஏவுகணையை பயன்படுத்தியேஇ 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் தற்போதுஇ கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணையின் வெற்றுத் தோட்டாஇ பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்தாக கூறப்படும் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான கடாபி என்பவர்இ  திறமையாக துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடியவர் எனவும்  சுவற்றில்இ துப்பாக்கியால் சுட்டு தனது பெயரை தோட்டக்களில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரே விமானப்படையினருக்கு சொந்தமான விமானங்கள் பலவற்றை வீழ்த்தியுள்ளார்.

எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதலினால்இ விழுந்து நொருங்கிய பல விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக விமானப்படையினர் எண்ணி வந்துள்ளனர். போர் முடிவடைந்த பின்னர்இ புலிகளின் பதுங்குக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஏவுகணைகளில் வெற்று தோட்டக்கள்இ தாக்குதல் மூலமே விமானங்கள் வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தன.

சிறீலங்கா விமானப் படைக்கு சொந்த 8 விமானங்களை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment