flashvortex.

Tuesday, March 20, 2012

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் சர்ச்சை:தீர்மானத்தை தி.மு.க., ஆதரிக்கவில்லை

சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் தான் உளவுப்பிரிவு போலீசாரே கைது செய்வர்; இந்தியா போன்ற ஜனநாயக ஆட்சி நடக்கும் நாட்டில் கைது செய்யும் அதிகாரத்தை, உளவுப்பிரிவு போலீசாரிடம் வழங்குவதை எவ்வாறு ஏற்க முடியும்? அது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை' என, பார்லிமென்டில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில சுயாட்சிக்கு எதிராகக் கருதப்படும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப்படுவதை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அரசு ஓரளவு மட்டுமே ஓட்டுகள் பெற்றது.
நேற்று லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் பதிலுரை வழங்கிய பிறகு, ஜனாதிபதி உரையின் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த முக்கிய திருத்தங்கள் மீது, அவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தேசிய அளவில் பயங்கரவாத ஒழிப்பு மையம் அமைக்கப்படுவதை எதிர்த்து, பா.ஜ., சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், இடதுசாரிகள் சார்பில் மார்க்சிஸ்ட் எம்.பி.,யான பாசுதேவ் ஆச்சார்யா மற்றும் பிஜு ஜனதாதளம் சார்பில் மகதாப் ஆகியோர், தாங்கள் கொண்டு வந்திருந்த தீர்மானத்தை வலியுறுத்தி பேசினர்.

அப்போது சுஷ்மா சுவராஜ், "மாநில அரசின் அதிகாரங்களை பறித்திடும் செயலைத்தான் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் செய்யும். இது, மாநிலங்களுக்கு எதிரானது. எனவே, இந்த மையத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என்றார். பாசுதேவ் ஆச்சார்யா பேசும்போது, "2009ம் ஆண்டு என்.ஐ.ஏ., மையம் அமைத்தபோதே நாங்கள் எதிர்த்தோம். எனவே, அரசாங்கம் இந்த முடிவை கைவிட வேண்டும்' என்றார்.

பிஜு ஜனதாதளம் எம்.பி.,யான மகதாப் பேசும் போது, "எந்த நாட்டிலுமே உளவுப் போலீசுக்கு கைது அதிகாரம் வழங்கப்பட்டதில்லை. சர்வாதிகார நாட்டில் தான் அதுபோல நடக்கும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் உளவுப்பிரிவு போலீசாரே
தங்கள் இஷ்டம் போல் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால், பிறகு ஜனநாயகம் என்பதன் அர்த்தமே போய்விடும்' என்றார்.

தி.மு.க., அமைதி:தி.மு.க., சார்பிலும் திருத்தம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று தாங்கள் அளித்திருந்த எந்த திருத்தங்களையும் தி.மு.க., வலியுறுத்தாமல் அமைதியாக இருந்தது. அனைவரும் பேசி முடித்ததும், லாபியை அடைக்க சபாநாயகர் மீரா குமார் உத்தரவிட்டார். இதற்கு சில வினாடிகளுக்கு முன் சுதாரித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் வெளியேறினர்.
தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அனைவரும் கூண்டோடு எழுந்து, அவையை விட்டு வெளியேறினர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் வெளியேறியதை பார்த்தவுடன், தி.மு.க., எம்.பி.,க்கள் ஆச்சரியமடைந்ததை உணர முடிந்தது . தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து கொண்டு வரப்படும் தீர்மானம் என்பதால் திரிணமுல் காங்கிரஸ் இதை செய்தது.ஓட்டெடுப்பு ஆரம்பமானதும் தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் திருத்தத்தை ஆதரித்து ஓட்டு போட்டுனர். சமாஜ்வாதி கட்சியும் ஆதரித்து ஓட்டு போட்டது. மேலும், குருதாஸ் தாஸ் குப்தா ஒரு திருத்தம் கொண்டு வந்து

வலியுறுத்தினார். :"தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாக அரசு செயல்படுகிறது. மல்லையா போன்றவர்களை சந்திக்கிறார் பிரதமர். ஆனால், ஐந்தாண்டுகளாக தொழிற்சங்கத் தலைவர்களை பார்க்க பிரதமருக்கு நேரம் இல்லை. இதையும் எதிர்க்கிறோம்' என அத்திருத்தத்தில் வாசகம் இருந்தது.இந்த திருத்தத்தையும் எதிர்த்து தி.மு.க., ஓட்டு போட்டது. தவிர, டி.ஆர்.பாலு அளித்திருத்த திருத்தம் உட்பட பலவற்றையும் ஒன்றாகப் போட்டு ஒரு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும் கூட தாங்கள் கொண்டு வந்திருந்த திருத்தம் என்றும் கூட பார்க்காமல் அரசாங்கத்தை ஆதரித்து ஓட்டு போட்டது தி.மு.க.,அரசை ஆதரிக்கும் கட்சிகள் முன்னதாகவே ஓட்டளிக்காமல் தவிர்த்ததாலும், பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் இரு அணியாகச் செயல்பட்டதாலும், தனிப் பெரும் மெஜாரிட்டியில் இல்லாவிட்டாலும், தீர்மான ஓட்டெடுப்பில் அதிக எண்ணிக்கையில் அரசு வெற்றி பெற்றது.

மெஜாரிட்டி எங்கே?நேற்று எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட மொத்தம் நான்கு திருத்தங்களுக்கு, லோக்சபாவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில், அவையில் இருந்த எம்.பி.,க்கள் 374 பேர் பங்கேற்றனர். இதில், அரசுக்கு கிடைத்த ஓட்டு எண்ணிக்கை 227; எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டு எண்ணிக்கை 146.அரசுக்கு தனி மெஜாரிட்டி என்பது குறைந்தபட்சம் 271 ஓட்டுகள்; இதில், 44 ஓட்டுகள் குறைவாகக் கிடைத்தது. இதை தனது பேச்சில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "குறைந்தபட்ச பெரும்பான்மையை இந்த அரசாங்கம் பெற இயவில்லை' என்றார். இதில் பங்கேற்காது, அரசு ஆதரவு கட்சியான திரிணமுல் வெளிநடப்பு செய்துவிட்டது.அரசை ஆதரிக்காத சமாஜ்வாதி கட்சி, அரசை ஆதரித்து ஓட்டுப் போட்டது. என்ன காரணம் என்றே தெரியவில்லை, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் சபையை விட்டு வெளியேறினர். இதனால், அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி தொடர்கிறது என்பது வெளிச்சமானது.

No comments:

Post a Comment