flashvortex.

Sunday, March 25, 2012

தீவிரவாத இணையத்தளங்களைப் பார்வையிடுவோருக்கு சிறை - பிரான்ஸ்

தீவிரவாத நடவடிக்கைகளைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இணையத்தளங்களைப்
பார்வையிட்டால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளது பிரான்ஸ்.

இது தொடர்பில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி புதிய சட்டங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது.
சர்வதேச அளவில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை பிரான்ஸையும் பாதித்துள்ளது. எனவே அவற்றை ஒடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுக்கவுள்ளது. இதில் தீவிரவாத இணையத்தளங்களைப் படிப்பவர்கள் அவற்றை உருவாக்குபவர்கள் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment