flashvortex.

Friday, March 23, 2012

சிறீலங்கா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா

வான் மற்றும் கடலோர கண்காணிப்பு உபகரணங்களை சிறீலங்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அமெரிக்கா உடனடியாகத் தளர்த்தியுள்ளது. 

இதன்படி ஆயதங்கள் பொருத்தப்படாத கண்காணிப்புப் படகுகள், கமராக்கள்,  ஒளி விமானம், மற்றும் இதனுடன் தொடர்புடைய கருவிகள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
குறித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சிறீலங்காவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு (1980) முன்னரே இத் தடை அமுல்படுத்தப்பட்டிருந்தன.

நேற்று (22)  இடம்பெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வின் பின்னரே இந்தத் தீர்மானத்தை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது.

அதேவேள, 2009ஆம் ஆண்டு சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த கால மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்கா இலங்கையை கேட்டுள்ளது.

No comments:

Post a Comment