flashvortex.

Friday, March 30, 2012

அவசர மையத்திற்கு போன் செய்து உயிர் பிழைத்த நாய்: இங்கிலாந்தில் வினோதம்


இங்கிலாந்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய் ஒன்று அவசர மையத்திற்கு போன் செய்துஇ உயிர் பிழைத்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவசர உதவி சேவை மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது.


போனை எடுத்து அங்கிருந்த ஊழியர் பேசினார். ஆனால் மறுமுனையில் இருந்து வெறும் மூச்சு சத்தம் மட்டுமே தொடர்ந்து கேட்டது.


பேச முடியாத அளவுக்கு யாரோ ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த ஊழியர்இ உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.



அங்கு சென்ற அதிகாரிகள் வீடு பூட்டியிருந்ததை பார்த்து குழப்பம் அடைந்தனர். எனினும் வீட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அதை பக்கத்து வீட்டுக்காரர் பால் வாக்கர் என்பவர் பார்த்துவிட்டுஇ வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு ஓடினார். பின்னர் அனைவரும் வீட்டுக்குள் சென்றனர்.


அங்கு ஒரு அறையில் போன் வயர்கள் கழுத்தில் சிக்கி காயத்துடன் வளர்ப்பு நாய் ஜார்ஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே வயர்களை பிரித்து எடுத்தார் பால் வாக்கர்.


பசட் ஹூண்ட் வகையை சேர்ந்த ஜார்ஜுக்கு 2 வயது தான். கழுத்தில் சிக்கலாக போன் வயர் சிக்கியதும்இ டயல் எண்களை தாறுமாறாக அழுத்தியுள்ளது. அதில் அதிர்ஷ்டவசமாக 999 என்ற அவசர உதவி மையத்துக்கு போன் அழைப்பு சென்றுள்ளது தெரியவந்தது.

No comments:

Post a Comment