flashvortex.

Wednesday, March 21, 2012

அதிபர் தேர்தலுக்கு 69 கோடி ரூபாய் செலவழித்துள்ளார் ரஷ்ய பிரதமர் புடின்

ரஷ்யாவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், பிரதமர் விளாடிமிர் புடின் மட்டும், 40 கோடி ரூபிள் (69 கோடி ரூபாய்) செலவழித்துள்ளார்.

ரஷ்யாவில், சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட பிரதமர் விளாடிமிர் புடின் அதிபராக வெற்றி பெற்றார். இத்தேர்தலில், அவர் பிரசாரத்திற்காக செலவு செய்தது, 39 கோடியே 98 லட்சத்து 53 ஆயிரம் ரூபிள் (69 கோடி ரூபாய்). ரஷ்ய தேர்தல் கமிஷனின் விதிமுறைகளின்படி, 40 கோடி ரூபிளைத் தாண்டக் கூடாது.அவ்வாறு அதிகமாகும்பட்சத்தில், அத்தொகை உரிய நன்கொடையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.
புடினின் தேர்தல் கணக்கில், அவ்வாறு அதிகளவில் செலவான, 19 கோடி ரூபிள் திருப்பியளிக்கப்பட்டது. புடின் செலவழித்ததில், பாதி தொகையான 20 கோடி ரூபிள், ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியால், அவருக்கு அளிக்கப்பட்டது.புடின் செலவழித்ததில், 21 கோடி ரூபிள் வெகுஜன ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டதற்கும், 12 கோடி ரூபிள் அச்சடிக்கப்பட்ட பிரசார நோட்டீஸ்களுக்கும், 5 கோடி ரூபிள், கூட்டங்களுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வகையில், புடின் தான் முதன் முதலில், தனது செலவுக் கணக்கை வெளியிட்டுள்ளார்.அவருக்கு அடுத்ததாக, அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட தொழிலதிபர் மிகையில் ப்ரோகொரோவ், 33 கோடி ரூபிள் செலவழித்துள்ளார்.

No comments:

Post a Comment