flashvortex.

Thursday, January 19, 2012

பசுமையான தருணங்கள்............

படிக்கின்ற காலத்தில் நண்பர்களுடன் இருக்கும் தருணங்கள் வாழ்கையில் மறக்கமுடியாதது. அதிலும் பத்து நாட்கள் என் நண்பர்களுடன் கழிந்த பொழுதுகள் எத்தனை காலம் சென்றாலும் பசுமையான நினைவுகளாக இருக்கும்.

கனாக்காணும் காலங்கள் கூட எமது கல்லுரிக்காலத்திடம் கையேந்தும். 



எமக்குள் நடந்த சின்னச்சிறு சண்டைகள் இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கும்..........


தம்பியை விட்டு பிரிகின்றோம் என்ற கண்ணீருடன் ஆரம்பித்தது நண்பர்களுடனான என் பயணம்..............

காலை வேளையிலே தூக்கம் எம் கண்களை வருடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எம் தாய் கூட tea கொண்டு வந்து எழுப்புவாரா என்பது சந்தேகம் தான். ஆனால் எம்மோடு படிக்கும் எம் சக மாணவன் சுரேஷ் எமது room கதவினை தட்டி tea வந்திட்டு வாங்க என்றே கூப்பிடுவான். எல்லா மாணவர்களும் ready ஆனா படி தான் tea எடுக்க வருவார்கள். ஆனால் எமது அறையில் மட்டும் நித்திரையில் இருந்து எழும்பிக்கொண்டு செல்வர்கள். நான் அந்த நேரத்திலும் போர்வையினை போத்திக்கொண்டு தூங்கிய படிதான் இருப்பேன்.ஆனால் எனக்கும் சேர்த்து tea  கொடுத்து விட்டு தான் செல்வான். தனது cupல் தட்சா வாங்கி வைப்பாள்.  tea  நான் குடிப்பதில்லை. ஆனாலும் எனக்கு எப்போதும் வாங்கி வைப்பார்கள் என் நண்பர்கள்.


 எமது ஆசிரியர் காலை வேளையிலே 7.30 மணிக்கே தயாராகி கீழே வந்து விட வேண்டும் என்று கூறுவார். ஆனால் எல்லோரும் தயாராகி சென்றாலும் எமது roomலும் எம் பக்கத்து room ல் இருந்தும் யாரும் செல்லமாட்டார்கள். எல்லோரையும் sir வரட்டாம் என்று சொல்லிக்கொண்டு எம்  roomஇணை தட்டும் போதுதான் நான் கண் முழிப்பேன். என் நண்பிகளில் மிருஷா மட்டும் முதலே readyயாகி விடுவாள். ஆனால் முருகாவும் தட்சாவும் 7 மணிக்கு தான் எழும்பி நின்று  readyஆவதற்கு சண்டை பிடிப்பார்கள். என்னை எப்போதும் மிருஷா தான் எழுப்பி விடுவாள். நானும் அவசர அவசரமாக தயராகுவேன். ஆனாலும் என் நண்பர்கள் என்னை விட்டுட்டு தனியாக busக்கு  செல்ல மாட்டார்கள். நாங்கள் புறப்பட்டு செல்லும் வாகனத்தின் Driver Horne அடிக்கும் வரை எமது அறையில் இருந்து யாரும் வெளியே செல்ல மாட்டோம்.பெரும் பாலும் காலை உணவு busக்குள் தான்.  busகுள்ளும் அருகருகே தான் இருப்போம். ஏறியவுடன் நானும் மிருஷாவும் ஒருவர் மீது ஒருவர் தூங்கி விடுவோம். எனது Friend முருகா ரொம்ப அடாவடி தனம் பண்ணுவாள். நான் மிருவின் மடியிலே தூங்கினால் என்னை தட்டி எழுப்பி அவளின் தோள்ள தூங்கு என்பாள்.......இப்போதும் நாங்கள் சொல்லுவோம் எங்கள் பக்கத்தில் இருந்து வரதே என்று...............



தூக்கம் இல்லாத நாட்களிலும் வழமை போல நாங்கள்  busல் செல்லும் போதும் நாம் சும்மா இருப்பதில்லை. ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். ஒரு song மற்றவர்களுக்கு பிடித்திருந்தாலும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் Driverகூட விட்டு வைப்பதில்லை.  பாட்டை  மாத்துமாறு கூச்சலிடுவோம்.    Driver தனக்கு பிடித்த பழைய பாடல்களைத்தான் அதிகமாக போடுவார்.......நாம்  அவருக்காக ஒரு பாடல் பாடுவோம். "டப்பா டப்பா busப்பா.......பாட்ட கொஞ்சம் மாத்துப்பா" அவரோ வேண்டா வெறுப்பாக மாத்துவர்..... a.c  ஒத்துக் கொள்வதில்லை இதனால் a.c போடா வேண்டாம் என்றும் கத்துவோம்.


இரவு நேர கலந்துரையாடல் 12 மணிக்கு முடிந்தாலும் நாம் தூங்குவது 3,4 மணிக்கு தான். அதுவரையிலும் மொட்டமாடியில் இருந்து அரட்டை அடித்து கொள்வோம். தூக்கம் தொலைத்த இரவுகள் தாண்டி விடியும் பொழுதில் களப் பயிற்சிக்கு செல்வோம். அப்போதுதான் எம் உற்ற தோழனான உறக்கம் எம் கண்களில் வரும். அங்கும்  நாங்க தூங்குவோம் ஆனால் மற்றவர்கள் தூங்கினால் அவர்களை photo எடுத்து சிரித்துக்கொள்வோம். 


சாப்பிடும் நேரத்திலும் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. நானும் முருகாவும்  மிருசாவும் பகிர்ந்து தான் சாப்பிடுவோம். ஹோடேளிலும் அப்படித்தான்.     2க்கு ஆர்டர் செய்வோம்.3வரும் சாப்பிடுவோம். ஆனால் முதல் 2 நாட்கள் 3க்கு ஆர்டர் செய்தோம் சாப்பிட்டது 2தான்.   மீதியை parcel  செய்து கொண்டு வந்தோம்......எம் roomக்கு வந்து நானும் தட்ஷாவும் தூங்கின பிறகு மிருஷாவும் முருகாவும் மட்டும் இரவு எத்தனை மணி நேரம் சென்றாலும் சாப்பிட்டு தான் தூங்குவார்கள். அடுத்தநாள் morning செல்லுவார்கள்......



எங்க எல்லோருக்கும்  phone வரும். யார் எடுக்கிறாங்க எடுக்கிறாங்க என்றது இல்லை. அடித்து பிடித்து answer பண்ணுவம் மற்றவர்களின் phoneகளை. ஆனால் எமது phoneக்கு call  வந்தால் ஒவ்வொருவரும் பேசாமல் இருக்க வேண்டியதுதான். ஏன் என்றால் answer செய்வது மற்றவர்கள் தான். எங்க roomல் மட்டும் யாரா இருந்தாலும் போன் கதைக்க கூடாது என்று கூறியுள்ளேன். ஆனால் எல்லோரும் அதைகேட்டு வெளியே சென்று கதைப்பார்கள். நான் மட்டும் எனக்கு போன் வந்தால் ரூமில் இருந்து கதைப்பேன். என் friends சொல்லுவார்கள் நீ  மட்டும் கதை என்று...அந்த அளவுக்கு இருக்கும்......எங்கள் room.



எந்த நிலையில் இருந்தாலும் நாம் photo எடுப்பதென்றால் மறுப்பு சொல்வதே இல்லை. நாம் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரம் மிருஷா எழும்பி நாம் எப்படி தூங்குகிறோம் என்பதை photo எடுத்து  காட்டுவாள் அதிகாலை.........என்னதான் 

2double bed இருந்தாலும் தூங்கினது என்னமோ ஒருவர்மீது ஒருவர் தான் கால்களினால் மற்றவருக்கு உதைத்து கொண்டு தூங்குவோம். ஒழுங்காக bedல் தூங்கவே மாட்டோம். எனது காலில் முருகாவின் தலையும் முருகாவின் காலில் எனது தலையும் இருக்கும் காலையில்...அது போல தான் மிருஷாவும் தட்ஷாவும் தூங்குவது.............


இரவு நேரத்தில் எத்தனை மணி சென்றாலும் தலைக்கு தோய்ந்து விட்டு தான் நானும் முருகாவும் தூங்குவோம். ஆனால் தலையை மட்டும் கழுவிக்கொண்டு வந்துவிடுவோம். இதனால் தட்சாவிடமும் மிருஷாவிடமும் நாம் வதைபட்ட சம்பவங்கள் பல....எல்லோரும் உறங்கும் நேரத்திலும் கூட தட்ஷாவும் முருகாவும் ஆடைகளை துவைத்த சந்தர்பங்களும் உண்டு......எனக்கு பெரும்பாலும் மிருஷா ஆடைகளை துவைத்து காயப்போட்டு rooக்குள் எடுத்துக்கொண்டு வந்தும் வைப்பாள். 



நாம் வெள்ளவத்தை கடக்கரைக்கு சென்றது அமாவாசையோ பருவம் அன்றுதான். அதனால் எங்க சபேஷ்sir எங்களை கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று கூறினார். ஏனென்றால் அன்று அலை அதிகமாக அடிக்குமாம் என்றார்.  sir   சொன்ன அடுத்த நொடியே நாம் 4பேரும் sirருக்கு hi சொல்லிக்கொண்டு கடல் அலைகளுடன் சங்கமித்தோம்.அதைக்கண்ட sir
ரொம்ப பயந்திட்டார்... எல்லோரும் வாங்க roomக்கு போவம் என்று கூறினார். நாமோ 5 நிமிடம் sir என்று சொல்லிக்கொண்டு அலைகளுடன் விளையாடினோம். ஒவ்வொருவரது கைகளை பிடித்துக்கொண்டு கடற்கரையில் இருந்தோம். அலைகள் வந்து எம்மை இழுத்துக்கொண்டு செல்லும்...எங்களுக்கோ விளையாட்டு.  

நாம் மட்டும் நனைந்தால் போதுமா கவி துவாரகி இருவரையும் சேர்த்து இழுத்து விழித்தினோம். மண்ணினால் எறிந்து விளையாடினோம்...sir வந்து வாங்க எல்லோரும் போவம் என்று கூட்டிகொண்டு சென்று விட்டார்.......roomமுக்கு வந்த பின்தான் தெரிந்தது நாங்கள் 4 பேரும் கடல் மண்ணை எல்லாம் கொண்டு வந்தது........




எங்கள் 3வரிடமும் தான் காசுப் பொறுப்பு தந்தது. ஆனால் நாம் இரவு கணக்கு பார்க்கும் போது காசு சரியாவே இருக்காது. நானும் முருகாவும் எங்கள் காசுகளை போடுவோம்....அப்புறம் இருந்து நீ சரியாய் கணக்கு எழுதி வைக்கவில்லை என்று சண்டைகள் பிடிப்போம்........எங்களுக்குள் நடந்த சிறு சண்டையும் அதுதான்  ஒரு சமயம் எல்லோர் roomக்கும் போய் ஒவ்வொருவரிடமும் 10ருபா வேண்டின சமயமும் உண்டு...மிருஷா மட்டும் யார்கிட்டயும் காசு வேண்ட போகவே மாட்டாள்....அதையும் சொல்லி சிரிப்போம்......


நாங்க கண்காட்சி பார்க்க களனிக்கு சென்றிருந்தோம். அங்கு தட்சா முருகா இருவரையும் விட்டு நானும் மிருஷாவும் பிரிந்து விட்டோம்.......அப்புறம் முருகாவை கண்டு பிடித்தோம்.... ஆனால் அவளுடனும் இருந்தது சிறிது நேரம் தான். எல்லோரையும் ஒரு roomக்குள் வாங்க படம் போடப்போறம் என்றார்கள். முருகா சென்றுவிட்டாள். ஆனால் நானும் மிருஷாவும் போகவே இல்லை. நாங்க போகாததும் சந்தோசம் தான். ஏனென்றால் முருகா படத்த பார்த்து அழுதாளாம் என்று எங்க மற்ற friends  சொன்னங்க......நாங்க வெளியல நின்ற நேரம் ஏதோ ஒரு பாதையால போய் ஏதோ ஒரு பாதையால வந்தோம். அந்த நேரமும் ice cream குடித்துக்கொண்டும் சோளம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்........பிறகு எல்லோரும் busக்கு சென்று விட்டார்கள். நாங்கள் இருவரும் கடைசி நேரத்தில் போய் சேர்ந்தோம்.  


பயணத்தில் நடந்தது பல உங்களுடன் பகிர்ந்ததோ சில..........உங்களுக்கும் இவ்வாறான பல சம்பவங்கள் நடந்திருக்கும். நீங்களும் இப்படியான பசுமையான நினைவுகளை நினைத்து பாருங்கள்..............ஒவ்வொரு friendஉம் தேவை வாழ்கையின் பசுமையான நினைவுகளுக்கு.......




8 comments:

  1. கனாகால நினைவுகளை மீட்டுத்தந்த நண்பிக்கு நன்றிகள் தொடரட்டும் எம் அனுபவங்கள்

    ReplyDelete
  2. நட்புக்கு முடிவில்லை ஈனால் அது முடிவது காதலால் தான் இது எனது அனுபவமில்லை

    ReplyDelete
  3. இப்போதும் எங்களுக்குள் இருப்பது காதல் தானே.......ஏன் உங்களுக்கு நட்பு இல்லையா

    ReplyDelete
  4. awesome ....friendship is life.
    but love is part of life.. nice experience chellz..
    நீ இல்லை என்றால்
    நான் இல்லை
    என்றது காதல்


    நீ இல்லை என்றாலும்
    நான் இருக்கேன்
    என்றது நட்பு
    keep it up.....jan...

    ReplyDelete
  5. நல்லாத்தான் இருக்கு .. உங்கள நினைக்க பயமாவும் இருக்கு
    எங்க தளத்துக்கும் ஒரு எட்டு வந்திட்டு போறது ....

    ReplyDelete
  6. நினைவுகள் மாறாது நிகள்வ்வுகள் மாறாது காலம் மாறினாலும்

    ReplyDelete