flashvortex.

Saturday, March 24, 2012

சிறீலங்காவிற்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்காவின் ஒபாமா அரசாங்கம் சிறீலங்காவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமேன அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அமெரிக்கா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் முதல் இதனையே அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேரவை பேச்சாளர் டொமி வியோட்டர் தெரிவித்துள்ளார்.
 
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் முழுமையான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment