flashvortex.

Sunday, December 25, 2011

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களின் தமிழகப் பயணம் நேர்காணல்

aho;g;ghzg; gy;fiyf;fof Clftsq;fs; kw;Wk; gapw;rpika khztHfspd; ntspf;fsg; gapw;rpf;fhd jkpofg; gazk; mDgt uPjpahfTk; mwptpay; uPjpahfTk; rpwe;j gaid mspf;fpd;wJ vd kfpo;Tld; $Wfpd;wdH khztHfs;.

15 ehl;fs; nfhz;l FWfpa gazkhf ,J mike;j NghjpYk; mwpitAk; Mw;wiyAk; khztHfspilNa cz;lhf;fpAs;sJ.
                    
 ,e;epiyapy; ,e;jg; gazk; Fwpj;J ,g; gazj;jpy; gq;F nfhz;l khztHfspd; fijfis mwpe;J nfhs;Sk; Kfkhf mtHfSld; Ngrpa NghJ………..

போதைக்கு அடிமையாகும் பேதைகள்!

எங்கு பார்த்தாலும் இன்று போதைப் பொருளின் ஆதிக்கம் தான் நிறைந்துள்ளது. பாடசாலை மாணவர்களில் இருந்து வேலை செய்பவர்கள் வரை போதைக்கு அடிமையாகி உள்ளார்கள். போதை பொருளின் பாவனைக்கு அடிமையாகி தமது வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளமானோர்.

போதைப் பொருள் என்றால் என்னவென்று பார்த்தால் போதையை ஏற்றிக் கொள்வதற்காகவும் சிலரால் பொழுது போக்கிற்காகவும் உள்ளெடுக்கப்படுபவை. இந்த போதைப் பொருட்களில் மதுபானம், புகையிலை, கஞ்சா, சிகரெட், போன்ற போதை தரும் பல வகையான போதைப் பொருட்கள் இன்று பாவனையில் உள்ளன. 

Friday, December 23, 2011

கிறிஸ்மஸ் தாத்தா எப்படி உருவானார்? _

கிறிஸ்மஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்மஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்) ஆவார். இவர் உருவான வரலாறு சுவாரஸ்யமானது.

சாண்டா கிளாஸ் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். புனித நிக்கொலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் கிறிஸ்மஸ் தாத்தா பாத்திரம் உருவானது. டாக்டர் கிளெமென்ற் மூர் என்பவர் தான் இதை உருவாக்கினார்.

யாழ் பத்திரிகைகள் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பு...... 'ஊடகங்கள் உண்மையை கூறவேண்டும';

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்தளம் மிக முக்கிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதிகாலை பத்திரிகை பார்க்கா விட்டால் எமக்கு விடியாதது போல் உள்ளது என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
பத்திரிகைகள் மக்கள் மத்தியில் எவ்வாறான மாற்றத்தைக்கொண்டு வருகின்றன என்பது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர்

Wednesday, December 21, 2011

கோபம், சண்டை வரும்போது மௌனம் பேசாதீர்கள்!

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.
ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும்.

உயிரா? உண்மையா?

 யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்மக்களிடம் கேட்டபோது எல்லா மக்களிடமும் இருந்து வந்த பதில் 'எங்களுக்கு நடந்தது, நடக்கிறது தெரியும் ஆனால் எம்மால் எதுவுமே  சொல்லமுடியாது. ஏங்களை எதுவுமே கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டிட்டு போய் கண்டபடி எழுதுவீர்கள் பிரச்சனை எங்களுக்குதான்.அது உங்களுக்கு தெரியாது'  இதே பதில்தான் யாழ்நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டோம் என்ற பதில்தான் எங்களுக்கு கிடைத்தது. யாழ் நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்கு கிடைத்தது.

Saturday, December 17, 2011

நம்பிக்கையின் மறு உருவம் கல்பனா சாவ்லா

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்)

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை)

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (Super Man)

உலகிலேயே மிகுந்த பலசாலி யாரென்று கேட்டால் நீங்கள் யாரைக்குறிப்பிடுவீர்கள்? சிறுவர்களையும், இளையர்களையும் கேட்டால் ஒரு பெயர் அடிக்கடி ஒலிக்கும் அதுதான் 'சூப்பர்மேன்'. சராசரி மனிதனால் செய்ய முடியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பல சாகசங்களை திரையில் புரிந்து பார்ப்பவர்களை கனவுலகில் சஞ்சரிக்கவிட்ட ஓர் அற்புத கதாபாத்திரம்தான் 'சூப்பர்மேன்'. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். என்பதுகளிலும், தொன்னூறுகளிலும் உலகின் ஆக பலசாலியாக திரையில் வலம் வந்த அவர் ஓர் விபத்தின் காரணமாக தன் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், பலத்தையும் இழப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்

நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.

ரத்மலனையில் ஓர் அற்புத திருநந்தீஸ்வரம்!

ரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது திருநந்தீஸ்வரம் ஆலயம். இலங்கையின் பெரும்பாலானோர், இவ்வாறானதொரு ஆலயம் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மிகப் பழைமை வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் சுவடுகள் இன்னமும் அழியாமல் இருப்பது இறைசக்தி என்றே கணிப்பிட முடியும்.
திருநந்தீஸ்வரம் ஆலயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். பெரும்பாலான சிங்கள மக்கள் செறிந்துவாழும் அப்பகுதியிலுள்ள இந்த ஆலயத்தை ‘ கொனா கோவிலய(நந்திக் கோயில்’ என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
வித்தியாசமான அமைதி பொருந்திய இடமாக கோயில் வளாகம் இருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழைமையான ஆலமரம் இன்னும் கோயிலுக்குச் சான்றாக விளங்குகிறது.
போர்த்துக்கேயர் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழ்ந்த இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்கி வந்துள்ளது.

திருகோணேஸ்வரர் ஆலயம்

அமைவிடம்:-  திருகோணமலை

இறைவர் திருப்பெயர் : திருக்கோணேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : மாதுமையாள்
தல மரம்   : கல்லால மரம்
தீர்த்தம்    : பாவநாசம்
வழிபட்டோர்   : இராவணன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் தமிழர்
தேவாரப் பாடல்கள்  : சம்பந்தர்

தல வரலாறு

  • இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.
  • சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என்று வழங்குகின்றது.
  • போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான்.

Tuesday, December 13, 2011

பிரான்ஸ் செல்ல யாழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு

குடியுரிமையுடன் பிரான்சில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தமது சொந்தங்களை பிரான்ஸ்சிக்கு அழைக்க விரும்பினால் அந்த கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறே தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த நியாப் நிறுவனத்தின் பிக்கப்ரக வாகனம் கரணவாய் இமையாணன் பகுதியில் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த பனைமரம், மின்சாரக்கம்பம் ஆகியவற்றுடன் மோதிச்சென்று இறுதியாக கடையொன்றின் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

 துன்னாலை வடக்கைச் சேர்ந்த வாகனச் சாரதியான கணேசமூர்த்தி பார்த்தீபன் (வயது 22), கரவெட்டி வடக்கைச் சேர்ந்த செல்வநாயகம் கோபிநாத் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

அதேவேளை இவ் விபத்தில், அல்வாய் தெற்கைச் சேர்ந்த அம்பிகைபாலன் செந்தூரன் (வயது 23) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இவ் விபத்துச் சம்பவம் குறித்து பருத்தித்துறை காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, December 12, 2011

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷனை போக்குவதற்கான சிறந்த வழி

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும்.சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.

டைம் மேகசினில் கொலவெறி

ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு , வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல். பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல். கோலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

உலக அமைதிக்கான நோபல் விருதுகள் மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டன

Paristamilஅநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.

நோபல் அறக்கட்டளை நிறுவிய ஆல்பிரட் நோபல், 1896, டிசம்பர் 10ம் தேதி, இத்தாலியில் காலமானார். ஆண்டுதோறும் அவரது நினைவு நாள் அன்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், நோபல் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.

இந்தாண்டுக்கான நோபல் விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று, நோபல் விருதுகள், உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. அறக்கட்டளை விதிகளின்படி முதலில், உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதும், 15 லட்சம் டாலர் ரொக்க மதிப்புடையவை. லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன்,73, லைபீரிய பெண் உரிமைப் போராளி லீமா போவீ,39 மற்றும் ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடி வரும் தவாக்குல் கர்மான்,32, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான நோபல் விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம், நோபல் விருதுகள் என்றாலே அது ஆண்களுக்குத் தான் என்ற வாதம் முறியடிக்கப்பட்டதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மனை‌வி எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.
 
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
 
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
 

உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியாவில் இந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கவிருந்த உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை யார் நிர்வகத்து நடத்துவது என்பது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பன்னாட்டு வீரர்கள் பங்குபெறவிருந்த இந்த உலக ஹாக்கி சீரீஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக போட்டிகளை நடத்தும் நிம்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நிம்பஸ் நிறுவனம் இந்திய ஹாக்கி சம்மேளனத்துடன் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தவிருந்தது.தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்ற பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நிம்பஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கார்ல் டி கோஸ்ட்டா தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு அமைப்புகளான ஹாக்கி இந்தியாவும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், இடையே சிக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டும், ஹாக்கி விளையாட்டு வீரர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


Friday, December 9, 2011

மீட்பர் யேசு சிலை நிறுவி எண்பது ஆண்டுகள்

பிரேசில் நாட்டின் மிகவும் அறியப்பட்ட மீட்பர்  யேசுவின் சிலை அமைக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆகின்றன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள இந்தச் சிலையின் 80 ஆண்டுகளை குறிக்கும் நோக்கில், அது அமைந்துள்ள கொக்கோவடா மலைக் குன்றில் சிறப்பு பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன. 

குவானபரா வளைகுடாவை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ள மீட்பர் யேசுவின் சிலை பிரேசிலின் மிகவும் அறியப்பட்ட ஒரு இடமாக திகழ்கிறது. உலகெங்கிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் மீட்பர் யேசுவின் சிலையை தரிசிக்க சுமார் இருபது லட்சம் மக்கள் வருகிறார்கள். பதினைந்து மாடிகள் அளவுக்கு உயரமான இந்த யேசுபிரானின் திருவுருவச் சிலை, ரியோ டி ஜெனிரோவிலுள்ள கொக்கோவ்டா மலைக் குன்றின் உச்சியில் 1931 ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நிறுவப்பட்டது முதல் மக்களால் தரிசிக்கப்பட்டு வருகிறது.
அந்தச் சிலைக்குள் சென்று பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், அதன் அடிவாரத்திலிருந்து பார்த்தால் உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்று எனக் கருதப்படும் ரியோ டி ஜெனிரோவின் முழுப் பார்வையும் தெரியும்.

உலக சாதனை : சேவாக் அதிரடி இரட்டை சதம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி இந்தியாவின் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று(8.12.2011) பகல்/இரவு ஆட்டமாக நடந்து வருகிறது.

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் சேவாக் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சேவாக்-காம்பீர் ஜோடி களமிறங்கியது.

ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக்-காம்பீர் ஜோடி, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

இத்தாலியில் மாஃபியா கும்பல் தலைவர் பிடிபட்டார்

இத்தாலியில் கமோர்ரா எனப்படும் சட்டவிரோத குற்ற வலயமைப்பின் மிகச் சக்திவாய்ந்த தலைவரான மைக்கேல் ஸகாரியா என்பவரைத் தாங்கள் பிடித்துள்ளதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர்.

கடந்த பதினாறு வருடங்களாக இவர் சட்டத்தால் தேடப்பட்டு வந்த ஒரு நபர்.

நேப்பில்ஸ் நகரருகேயுள்ள தனது சொந்த ஊரில் நிலத்தடியில் இருந்த ஒரு ரகசிய அறையிலிருந்து இவர் பிடிபட்டார்.

கமோர்ரா குற்ற வலயமமைப்பில் உள்ள ஒன்றான கஸாலெஸி பிரிவின் தலைவர் இந்த ஸகாரியா ஆவார்.

கூடுதலான பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு யூரோ நாணய நாடுகள் உடன்பட்டன

யூரோ நாடுகளின் கடன் நெருக்கடியை சமாளிப்பதற்காக உடன்படிக்கை
யூரோ நாடுகளின் கடன் நெருக்கடியை சமாளிப்பதற்காக உடன்படிக்கை யூரோ நாணயம் புழங்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவுத் திட்டத்திலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்துக்கு யூரோ புழங்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன்பட்டுள்ளன.
பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த மாநாட்டில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

Tuesday, December 6, 2011

மின்சாரம் தாக்கி யானைகள் மரணம்

இலங்கையில் அம்பாறை மாவட்டம் வீரகொடை 17 ம் குடியேற்ற கிராமத்தில் திங்கட்கிழமை நள்ளிரவு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இக் கிராமத்திற்குள் காட்டு யானைகள் ஊடுருவி, பொது மக்களின் பயிர்களையும் உடமைகளையும் சேதமாக்கி வருவதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Friday, December 2, 2011

எய்ட்சால் பாதிக்கப்பட்டோரை காக்க விரைவில் புதிய சட்டம் : ஆசாத் உறுதி

எய்ட்சால் பாதிக்கப்பட்டோரிடம், மற்றவர்கள் பாகுபாடாக நடந்து கொள்வதை தவிர்க்கும் வகையில், விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, டில்லியில் நேற்று விழா நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களால் பாகுபாடாக நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.

Thursday, December 1, 2011

மைக்கேல் ஜாக்சன் குடும்ப டாக்டருக்கு 4 ஆண்டுகள் சிறை ; நியூயார்க் கோர்ட் உத்தரவு!

பிரபல பாப் பாடகர், மைக்கேல் ஜாக்சன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரேக்கு, நான்கு ஆண்டுகள், சிறைத் தண்டனை விதித்து, நியூயார்க் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.

என்ன நடந்தது? : கடந்த 2009, ஜூன் 25ம் தேதி, மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே, 58, அவரைப் பரிசோதித்து விட்டுச் சென்றார். பிரேத பரிசோதனையில், அளவுக்கு அதிகமாக, "ப்ரோபோபோல்' என்ற வலி நிவாரணி அவர் உடம்பில் இருந்தது தெரியவந்தது.

சர்வாதிகாரி ஸ்டாலின் மகள் அமெரிக்காவில் காலமானார்

முன்னாள் சோவியத் ஒன்றிய சர்வாதிகாரியான காலஞ்சென்ற ஜோசஃப் ஸ்டாலினின் ஒரே மகளான ஸ்வெட்லானா அமெரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்றில் தனது 85 வயதில் காலமாகியுள்ளார். நவம்பர் 22ஆம் தேதி அவர் வயிற்றுப் புற்றுநோயால் இயற்கை எய்தியுள்ளார்.

 அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் 1967ல் ஸ்வெட்லானா சோவியத் யூனியனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது அச்சமயம் சோவியத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.