flashvortex.

Wednesday, July 24, 2013

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 01

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. சாவுகள் வேதனைகள் இனி தமிழ்ச் சமூகத்தை சூழாது இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற காலமிது. பின்னங் கால் பிடரியில் பட படுதுயரங்களோடு பாதுகாத்து வந்த உயிர்கள் பக்குவமாய் பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.

ஆனால், எங்கிருந்தோ காலன் வந்தான் தன் பாசக்கயிற்றை வீசினால் மீதமாய் கிடந்த உயிர்களை கொண்டோடுகிறான்.
ஆம், யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்த நிதிநிறுவனங்கள் நொந்து போன மக்களுக்கு ஆபத்தாண்டவர்களாக காட்சி கொடுத்து மக்கள் பலரை கடலாளியாக்கினர். வங்கிக்கடன், லீசிங், சீட்டு, மிரமிட் நிதி நடவடிக்கை, ரியல் எஸ்ரேட் முதலீடு, மீட்டர் வட்டி, நகையடைவென்று சூழ்ந்து கொண்ட அவலங்களால் இன்று பலர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இளம் மொட்டுக்களான பல இளம் குடும்பங்கள் பாழாய் போயின, போகின்றன. தற்கொலைகள் அதிகரிக்க வாரம் ஒரு தற்கொலைச் செய்தி எம்மை வந்தடைகிறது. உண்மையில் இது தற்கொலையல்ல ‘நிதி நிறுவனங்களின் கொலைகள்’ இதனை கண்டு கொள்வார் யாரும் இல்லை. என் செய்வோர்? ஏது செய்வோம்?

அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்ட பலரின் கதைகளை ஊடகம் இணையம் சேகரித்தது. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஊடக அறத்தை பேணுவதற்காக உரியவர்களின் பெயர்கள், அடையாளங்கள் தரப்படவில்லை
கடன் என்ற அரக்கனின் வருகை எத்தனையோ மனிதர்கள் வாழ்வில் புயலாய்
உருவெடுத்து உயிரை மாய்த்து கொள்ளும் சூழிநிலைகளும் உருவாகி வருகின்றது. தற்கொலை செய்ய துணிவு இருக்கும் போது தனது பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்காமல் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு மனிதர்கள் முடிவுகளை எடுக்கும் அவலங்கள் இன்று அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்காமல் தமது உயிரினை மாய்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில் 32 வயதுடைய ஜபாஸ்கரன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஸ என்பவர் வாழ்க்ககையோடு போராட முடியாமல் மண்ணுக்குள் சென்ற அவலம் கடந்த 25.06.2013 அன்று நடைபெற்றது. காதலித்து திருமணம் முடித்த ஐஸ்வர்யாவுடன்  ஜபெயர் மாற்றப்பட்டுள்ளது.ஸ   மகிழ்ச்சியாhக வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் கடன் என்ற அரக்கன் இவர்கள் வாழ்வில் புகுந்ததால் புயலாக மாறத் தொடங்கியது.  தினமும் குடும்பத்தில் பல பிரச்சினைகள் உருவெடுக்க பாஸ்கரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

எவ்வாறு இப்படி ஓரு சூழ்நிலைக்கு பாஸ்கரன் தள்ளப்பட்டான்? என்ன பிரச்சனை இவன் வாழ்வில் வந்தது என்ற பல கேள்விகளோடு நாம்; அவன் இருந்த இடத்துக்கு சென்றோம். பல தரப்பட்ட பிரச்சனைகளை அயலவர்கள் கூறினார்கள். ஒரு finance company   யில் பணிபுரிந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளால் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என தெரிய வந்தது. அதன் பிரச்சனையை என்ன என்று கேட்க பாஸ்கரன் வேலை செய்த இடத்தில் பணத்தினை அபகரித்ததாகவும் இதனால்தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.  இதன் பின்னர் பல லட்சம் ரூபாய் பணத்திற்கு கடனாளியானான்;. கட்ட வேண்டிய தொகை அதிகமாக பாஸ்கரனின் பேச்சுகளும் குறைந்தன. வீட்டினை விட்டு வெளியே செல்லாமல் சிறைப்பறவை போல் ஆனான்.

இந்த கால கட்டத்தில் முதலும் ஒரு தடவை தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளான். இவ்வாறான தொடங்கிய இவனது தற்கொலைக்கான முயற்சி இன்று உயிரினை மாய்த்து கொள்ளும் அளவிற்கு போய்விட்டது. தனது கணவனை இழந்த சோகத்தில் அவரது மனைவி கண்ணீர் மல்க அவளது துயரம் வெளிப்பட்டது. 'அவர் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என் வாழ்க்கை இவ்வாறு முடிந்து விடும் என்று ஒரு கணம் கூட நினைத்துப்பார்க்க வில்லை. என்து அப்பா அம்மா இருந்தும் ஏதொ நான் வெறுமையாக இருப்பது போன்று இருக்கினறேன். வீட்டில் நானும் அவரும் சிரித்து பேசிய இடங்களை பார்க்க இன்று கண்ணீர் மட்டும் தான் வெளிவருகின்றது.

 பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகள் வந்தும் அதை சமாளித்து கொண்டு தான் வந்தோம். இப்போது அவரே இல்லை என்று போய் விட்டது.' என்று தன் வலியுடன் கூடிய வார்த்தைகளை கண்ணீருடன் உதிர்த்தார். வீட்டு வாடகை மருத்துவச்செலவு எங்களது வாழ்க்கை செலவு என செலவீனம் அதிகரித்து செல்ல வாழ்க்கையும் இறுக்கமாகி விட்டது. இதனால் பிர்ச்சினைகளும் எழ ஆரம்பித்து விட்டது என மேலும் கூறினார்.

கணவனின் இநத்த தீடீர் மாற்றத்தினைக் கண்டு மருத்துவம் ஏதும் செய்யவில்லையா என கேட்டபோது ஜஸ்வர்யா எதுவுமே செய்யவில்லை. எங்கே கவுன்சிலிங் செய்வது என்று தெரியாது என்று கூறினார். மன அழுத்தத்துக்கு ஆளான பாஸ்கரனை யாருமே குணப்படுத்தவில்லை. இதனால்தான் தற்கொலை நடந்துள்ளது.

ஜஸ்வர்யா மாதிரி எத்தனையோ மக்கள் கவுன்சிலிங் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கின்றனர். எத்தனையோ இடங்கள் கவுன்சிலிங் செய்வதற்கு இருக்கின்றது. வைத்தியசாலையிலும் இதற்கான வைத்தியர்கள் இருக்கின்றனர். இதுமட்டுமன்றி ஒவ்வொரு இடத்திலும் சமூகசேவையாளர்கள் கவுன்சிலிங் செய்வதற்கு இருக்கின்றனர். இவர்கள் வீட்டுக்கே சென்று மனஅளுத்தத்தில் இருந்து விடுவிக்கின்றனர்.
பொருளாதார தாக்கத்தின் அழுத்தம் இன்று தினமும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றது. இதனால் பாஸ்கரன் மாதிரி எத்தனையோ மனிதர்கள் தமது வாழ்வினை முடித்துக்கொள்கின்றனர். தற்கொலை செய்ய துணியும் பலர்  பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள அச்சப்படுகின்றனர். ஒரு நிமிடம் கூட பிரச்சினைக்கான  தீர்வினை காணுவதற்கு; சிந்தித்து பார்ப்பதில்லை. ஒரு கணம் சிந்தித்தால் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட துணிந்து விடுவார்கள்  

No comments:

Post a Comment