flashvortex.

Wednesday, April 18, 2012

நோர்வே படுகொலைகளை குற்றமாக கருத முடியாது : பிரெய்விக்

நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆண்டெர்ஸ் பிரேய்விக் 'தான் செய்தவை குற்றச்செயல்கள் அல்ல' என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கார்க்குண்டு தாக்குதல், மற்றும் உட்டோயா தீவில் தொழில்கட்சியின் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் என்பவற்றில் 77 பேர் பலியாகியிருந்தனர்.

இவ்விரு தாக்குதல்களையும் ஒற்றை மனிதராக மேற்கொண்டிருந்த பிரேய்விக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று (திங்கட்கிழமை) அவர் நீதிமன்றில் இரண்டாவது தடவையாக ஆஜர்படுத்தப்பட்ட போது,

தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒப்புக்கொள்வதாகவும் எனினும் இவற்றை குற்றச்செயல்களாகவோ அல்லது தன்னை குற்றவாளியாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், 'நடந்த சம்பவங்கள் குரூரமானதாக இருந்தாலும், அவை மிக அவசியமானது. பல்லின மக்கள் ஐரோப்பாவை ஆக்கிரமிப்பதையும்,  நோர்வேயின் கலாசார தனித்துவம் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்கும் தேச துரோகிகளையே நான் கொலை செய்தேன். எனவே இச்செயல்களையிட்டு நான் சிறிதும் வருந்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

'இந்நீதிமன்றமும், பல்லினத்தவரின் கலாச்சாரத்தை ஆதரிக்கும் சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், என்னுடைய வழக்கை விசாரிக்க இது ஒரு பொருத்தமான அதிகார அமைப்பாக நான் கருதவில்லை. ஓர் இராணுவ நீதிமன்றில் என்னுடைய வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாக்குதல்களை மேற்கொண்ட வேளையில் பிரேய்விக் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என நிரூபிக்கப்பட்டால் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்க கூடும்.  எனினும் வைத்தியர்களின் தற்போதைய பரிசோதனை அறிக்கைகள் படி இவருக்கு அப்படி உளவியல் சிக்கல்கள் எவையும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால்,  21 வருட சிறைத்தண்டனை வழங்கப்படவும் சந்தர்ப்பம் உண்டு. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் தற்போது நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் விரைவில் இவ்வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
 

No comments:

Post a Comment