flashvortex.

Wednesday, March 21, 2012

பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து 14 பேர் பலி

ஆந்திராவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ், கால்வாய்க்குள் கவிழ்ந்ததில், 14 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.

ஆந்திராவில் கம்மம் மாவட்டம், வேப்பலகட்டா நகரில், எல்.வி.ரெட்டி மெமோரியல் பள்ளி உள்ளது. நேற்று பள்ளி முடிந்ததும், மாணவர்களை வீடுகளில் விடுவதற்காக, பஸ்கள் புறப்பட்டன. அவற்றில், ஒரு பஸ்சில் 50 மாணவர்கள் பயணித்தனர். துங்காராம் என்ற கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுவதை தவிர்ப்பதற்காக, டிரைவர், பஸ்சை விலக்கி ஓட்டினர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்தது.அருகில் இருந்த கிராம மக்கள் ஓடிவந்து, மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 இந்த விபத்தில், 10 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், நான்கு பேர், மருத்துவமனையில் உயிரிழந்தனர். கிராம மக்கள் உ<டனடியாக ஓடி வந்து மாணவர்களை மீட்டதால், மற்ற குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். இவர்களில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து நடந்ததை அறிந்த மாணவர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு திரண்டு வந்து, அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இந்த விபத்து குறித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment