flashvortex.

Thursday, March 22, 2012

அச்சத்தின் வெளிப்பாடு - மீண்டும் புலி வாலை பிடிக்கும் கோத்தபாய

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் இலங்கை தோல்வியடைந்தால் அது இலங்கையை எந்த வகையிலும் பாதிக்காது. பதிலாக எமக்கு புதிய சக்தியையே அது வழங்கும். எது எப்படியிருப்பினும் மேற்கத்தையே நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிந்துவிட்டதாக சிலர் பிழையாக கருதுகின்றனர் உண்மையில் யுத்தம் முடிவடைந்தது முதல் பல தடவைகள் புலிகள் மீள இயங்க எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பயங்கரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக இல்லாது ஒழிக்கப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான  உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளனர் பெருமளவிலான ஆயுதங்கள் தொடர்ந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளினால் தமக்கு எதிராக அழுத்தங்கள் அதிரிக்கும் போது, அதிலிருந்த தப்புவதற்கு மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுப்பது கோத்தபாயவின் வழமையான நடவடிக்கையே. இவரின் சலசலப்பு இங்கு எந்த மாற்றதையும் எனி எப்போதும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.

No comments:

Post a Comment