flashvortex.

Saturday, March 31, 2012

சீன ஆலையில் நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் ஒப்புதல்


ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரட் விலை அதிகரிப்பு


இலங்கையில் சிகரட் மற்றும் மது பானங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கான வரியை இலங்கை நிதி மற்றும் திட்டமிடலுக்கான அமைச்சு அதிகரித்ததனாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அனைத்து வகையான சிகரட்டுக்களின் விலையும் ஒரு ரூபாவால் உடனடியாக அதிகரிக்கப்படுவதாக சிலோன் டுபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது. அரசாங்கம் சிகரட்டுக்கான வரியை அதிகரித்ததனாலேயே விலை அதிகரிக்கப்படுவதாக அது கூறியுள்ளது.

ஜீஷா பிரமிட்டு.



மனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் படத்திலுள்ளன. எகிப்து நாட்டின் எல்லையிலும் நைல் நதி கரையோரமாகவும் அமைந்துள்ள "ஜீஷா" எனும் மாபெரும் பிரமிட்டுக்கள் 4000 வருடம் முன்பு கட்டப்பட்டுள்ளன. மாபெரும் பிரமிட்டுக்கள் பண்டய உலகின் ஏழு உலக அதிசயங்களில் மிகவும் பழைமையானதும் இன்றய காலம்வரை அழிந்து போகாமல் நிலைத்து நிற்பதாகவும் உள்ளது.

எந்தப் பெண் எப்படி? அறிந்து கொள்ளுங்கள்


சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வைத்தே அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது. இது பண்டை காலந்தொட்டு நமது இந்தியாவில் இருந்து வரும் பாரம்பரிய அறிவு… இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள் நமது பண்டைய கால இலக்கியங்கள், புராணங்கள் , மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் ஏராளம்.

இதில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உருண்டையான கண்கள் உள் வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு


தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த உயர்வுஇ வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்ட இந்த மின் கட்டண உயர்வுஇ சுமார் 40 முதல் 50 சதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Friday, March 30, 2012

சுதந்திரமாக சுற்றித் திரிந்த பின்லேடன்: ஒசாமாவின் மனைவி பரபரப்பு வாக்குமூலம்


அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 9 வருடங்கள் ஒசாமா பின்லேடன் தலைமறைவாக இருந்த போது சுதந்திரமாகவே சுற்றித் திரிந்தார் என்று அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு தலைமறைவாகவே இருந்த அவரது மூன்று மனைவிகளும்இ இரண்டு குழந்தைகளும் கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்டனர்.


மேலும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் அவரது மூன்றாவது மனைவி அளித்த வாக்குமூலம் வருமாறு: அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து குழந்தையுடன் மீண்டும் பாகிஸ்தான் திரும்பி விட்டேன்.


சில பாகிஸ்தானிய குடும்பங்களின் உதவியுடன் 7 வீடுகளில் தங்க வைக்கப்பட்டேன். 2002ஆம் ஆண்டு பெசாவருக்கு சென்று மீண்டும் ஒசாமாவுடன் இணைந்து கொண்டேன்.

கனடாவில் நினைவுகூரப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்கள்


கனடாவில் 1812ம் ஆண்டு நடந்த போரின் 200வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நேரத்தில் இராணுவ வரலாற்று சிறப்புடைய இடங்களையும்இ சம்பவங்களையும்இ குழுக்களையும் இனங்காணும் முயற்சியில் Pயசமள ஊயயெனய என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதில் செயிண்ட் ஜான்ஸில் உள்ள குரோஸ் நெஸ்ட் ஆஃபிசர்ஸ் கிளப் என்ற இடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது அட்லாண்டிக் யுத்தத்தில் பங்கேற்ற ராயல் கனடியன் நேவிப் படையின் வீரர்கள் இந்த இடத்தினை ஒரு மதுபானக் கூடமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அவசர மையத்திற்கு போன் செய்து உயிர் பிழைத்த நாய்: இங்கிலாந்தில் வினோதம்


இங்கிலாந்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய் ஒன்று அவசர மையத்திற்கு போன் செய்துஇ உயிர் பிழைத்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவசர உதவி சேவை மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது.


போனை எடுத்து அங்கிருந்த ஊழியர் பேசினார். ஆனால் மறுமுனையில் இருந்து வெறும் மூச்சு சத்தம் மட்டுமே தொடர்ந்து கேட்டது.


பேச முடியாத அளவுக்கு யாரோ ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த ஊழியர்இ உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நானும், சச்சினும் சிறந்த நண்பர்கள்: டிராவிட்


ராகுல் டிராவிட்டுக்கு கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சச்சின் பங்கேற்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று வதந்தி நிலவியது.
இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்இ கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.


16 ஆண்டு காலம் இந்திய அணிக்காக விளையாடிய டிராவிட்டை பெருமைப்படுத்தும் விதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த செவ்வாய்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

போப்பாண்டவர் - பிடல் காஸ்ரோ வரலாற்று முக்கியத்துவச் சந்திப்பு!


கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவருக்கும் இ கியூபாவின் முன்னாள்  தலைவர் பிடல் காஸ்ரோவுக்குமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு  நிகழ்ந்துள்ளது.  கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள போப்பாண்டவருக்கும்இ அரசியலில் இருந்து விலகிஇ ஓய்வு எடுத்து வரும் கியூபா முன்னாள் தலைவர் காஸ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு  தலைநகர் காவானாவில் நேற்று நடைபெற்றது.

சுமார் 30 நிமிட நேரம் இடம்பெற்ற இந்த உரையாடலின் போதுஇ பல்வேறு விடயங்கள் குறித்தும் இருவரும் பரஸ்பரம் உரையாடியதாகவும்இ கத்தோலிக்கத் திருச்சபையின் நடவடிக்கைகள் குறித்து காஸ்ட்ரோ ஆர்வமாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவை மீண்டும் எச்சரித்துள்ளோம் : அமெரிக்கா தெரிவிப்பு


சிறீலங்காவில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்குஇ கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

19வது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுகள் தொடர்பிர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறிலங்காஇ ஈரான்இ யேமன்இ லிபியாஇ சிரியாஇ பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் வீரத்தை பறைசாற்றும் ரஷ்ய ஏவுகணைகள்


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்ட பல வெற்றிகளுக்கு விமானப்படை தாக்குதலே காரணமாக அமைந்துள்ளது.

இக்கொடிய அரக்க விமானங்களின் தாக்குதலில் பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பல கோடி பெறுமதியான சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன.

இவ்வாறு நாசம் செய்யும் விமானங்களை தாக்கி அழிக்க விடுதலைப் புலிகளினால் பிரத்தியேக தாக்குதல் அணி உருவாக்கப்பட்டிருந்து. குறித்த படையணி சிறீலங்கா வான்படையினருக்கு பல வகையிலும் அச்சுறுத்தலாகவே இருந்துள்ளனர். இதுவரை சுமார் 8 விமானங்கள் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

Wednesday, March 28, 2012

சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு அதிபர் ஒப்புதல்

சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தனது ஆறு அம்ச பரிந்துரைகளுக்கு, அதிபர் பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐ.நா., - அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கோபி அன்னான் தெரிவித்துள்ளார். அவரது இந்த திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

எகிப்து புரட்சியைத் தொடர்ந்து சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது அதிபர் ராணுவத்தை ஏவத் துவங்கியதால், ஆர்ப்பாட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.இந்தப் போராட்டம், இன்று வரை தொடர்கிறது. இதற்கிடையில், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.,வும், அரபு லீகும் தங்கள் சிறப்பு பிரதிநிதியாக, ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னானை நியமித்து, சிரியாவுக்கு அனுப்பின.
ஆனால், அப்போதைய நிலையில் அதிபர் அவரது திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அன்னானின் பயணம் தோல்வியில் முடிந்தது. எனினும், இதுகுறித்து பேச்சு நடத்த ஐவர் குழுவை, அன்னான் சிரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதில் ஓரளவு பலன் கிட்டியது.

இந்தியா, சீனா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்கா விரைவில் முடிவு

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை சந்தேகித்து வரும் அமெரிக்கா, சர்வதேச அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்த, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக, சமீபத்தில் தெரிவித்தது.

இன்னொரு பிரேரணை கொண்டு வருவதை தவிருங்கள் - சிறீலங்காவிற்கு நெல்சன் மண்டேலா கோரிக்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு முன்னாள் உலகத் தலைவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான குறித்த குழு இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

யாழ். இணுவில் பகுதியில் இனம் காணப்பட்ட விசித்திர விலக்கினம் - படங்கள் இணைப்பு


யாழ் இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் இருந்து யானை முகம் கொண்ட உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலங்கின எலும்புக்கூடுகள் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன்கோவிலில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள தோட்ட வெளியிலேயே இந்த உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 27, 2012

தமிழ் சினிமாவின் சூப்பர்10 காதல்ஜோடிகள்


திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால், சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி, ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. 

நெற்றிப் பொட்டில் உள்ள ரகசியம்...!!

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத்தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர்.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம்.

உலகின் மிகச் சிறிய நாய்க்குட்டி : அசத்தல் வீடியோ இணைப்பு


இயற்கையின் விந்தையில் கணிப்பிட முடியாத பல அதிசயங்கள் நிகழ்வது வழமையே.

அந்த வகையில் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளது ஒரு நாய்க்குட்டி.

உள்ளங்கையை விட சிறிதாக காணப்படும் நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவிடம் அளவுக்கதிகமான அணு ஆயுதங்கள் : அதிபர் ஒபாமா ஒப்புதல்

எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலில், அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாடு துவங்குவதற்கு முன்னதாக அதிபர் ஒபாமா கூறியதாவது:எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளன. 1,500 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அணுகுண்டு பொருத்தப்பட்ட 5 ஆயிரம் ஏவுகணைகள் உள்ளன. எனவே, தான், அணு ஆயுதங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த விஷயத்தில், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன் அளித்து வருகின்றன.அணு ஆயுதம் தயாரிப்பதற்குரிய பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கின்றன. 

சீன பிரதமரின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற முன்றலில் திபெத்தியர் தீக்குளிப்பு


சீன பிரதமரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய பாராளுமன்ற முன்றலில் திபெத்திய இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இவ்வார இறுதியில் சீன பிரதமர் ஹூ ஜிண்டா இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் திபெத் மீது சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், சீன பிரதமரின் வருகை எதிர்த்தும் நேற்று டெல்லி பாராளுமன்றம் முன்பாக பல நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஜேஸி எனும் குறித்த இளைஞர் தன் மீது தீயை பற்றவைத்துக்கொண்டுள்ளார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்கும் சிறீலங்கா


சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்காவிற்கு பாடம் புகட்டிய ஹிலாரி கிளின்ரன்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை உடனடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், மேமாத நடுப்பகுதி வரை பொறுத்திருக்குமாறு அவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அமெரிக்கா - சிறீலங்காவிற்கிடையில் அதிகரிக்கும் இராஐதந்திர போர்


இறுதி போரில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறீலங்கா மீதான தனது பிடியை இறுக்கும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருகிறது.

ஜெனிவா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்குவற்கு முன் இந்த அறிக்கை வெளிவரவுள்ளது.

சிறீலங்கா இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களைப் படுகொலைசெய்தது எப்படி? ஒரு நேரடி சாட்சியம்


முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை சமூக வடிவமைப்பாளர்கள் அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். ]

30 ஆண்டு போரில் இறந்து போன வீரர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு


ஜேர்மனியின் லூட்ஸென் நகரில் முப்பதாண்டு போரில் இறந்து போன 75 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 1632ம் ஆண்டில் நடந்த லூட்சென் போரில் ஜேர்மனியர் ஸ்வீடன் வீரர்களைக் கொன்று புதைத்தனர்.


இந்தப் போருக்கு ஜேர்மனியின் உரோமன் கத்தோலிக்கத் தளபதியான ஆல்பிரட் வான் வாலன்ஸ்ட்டீன் தலைமையேற்றார்.

பிரிட்டனை சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்


ஸ்காட்லாந்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வெயிலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அபெர்டீன்ஷயரில் உள்ள ஃபைவ் கேஸலில்(Fyvie Castle in Aberdeenshire) அதிகபட்ச வெப்பமாகப் 22.8 டிகரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1965ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 22.2 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தது. அதை விட அதிக பட்சமாக இந்த வருட வெயில் ஸ்காட்லாந்தை மிகவும் சிரமப்படுத்தியுள்ளது.

மடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை கண்டுபிடிப்பு


மடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை ஒன்றை பறவையியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
மடகஸ்கார் தீவு, ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பெரிய தீவாகும்.
இத்தீவில் வாழும் விலங்குகளும், தாவரங்களும் மிகவும் அரியவை. உலகில் வேறெங்கும் காண இயலாதவை.
இந்நிலையில் இத்தீவில் வாழ்கின்ற புதிய காட்டு நாரை பறவையினத்தை முனைவர் ஸ்டீவன் குட்மன் தலைமையிலான பறவையியல் அறிஞர் கண்டுபிடித்து இதற்கு No.69 Mentocrex beankaensis என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Monday, March 26, 2012

வருடத்தில் மூன்று முறை பூக்கும் அதிசய மலர்

நீங்கள் இங்கே பார்க்கும் பூவின் மணமானது இறந்து போன விலங்கு ஒன்றின் உடல் அழுகும் போது வரும் மணத்துக்கு ஒப்பாக இருக்குமாம். பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்று ஆகும். Corpse flower, Amorphophallus titanum என்ற பெயர்களின் அழைக்கப்படும் இந்தப் பூ வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது என்பது இதன் விசேட அம்சமாகும். ஜெர்மனியின் Kiel என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் தான் மேற்படி பூவானது தற்போது மலர்ந்துள்ளது.

Sunday, March 25, 2012

சீனாவின் வெளிநாட்டுக் கடன் மளமளவென அதிகரிப்பு

சீனா, வெளிநாடுகளிடம் வாங்கியுள்ள கடன், கடந்த ஆண்டில் 695 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த 27 ஆண்டுகளில் மிக அதிகபட்சம். இந்த நிலைமை நீடித்தால், சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து சீன அன்னியச் செலாவணி நிர்வாகத் துறை, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2010ல் மட்டும், சீனாவின் வெளிநாட்டுக் கடன், 146 பில்லியன் டாலர் அதிகரித்து, ஒட்டு மொத்தமாக 695 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான கணக்குப்படி, சீனாவின் குறுகிய காலக் கடன், 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தீவிரவாத இணையத்தளங்களைப் பார்வையிடுவோருக்கு சிறை - பிரான்ஸ்

தீவிரவாத நடவடிக்கைகளைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இணையத்தளங்களைப்
பார்வையிட்டால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளது பிரான்ஸ்.

இது தொடர்பில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி புதிய சட்டங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு சலுகை: வாசன்

இலங்கையில் சிங்களர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள தமிழர்களும் விரைவில் அனுபவிப்பார்கள்,'' என மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன் மகன் நவீனுக்கும், அ.தி.மு.க., எம்பி தம்பித்துரை மகள் லாஸ்யாவுக்கும் சமீபத்தில் திருப்பதி திருமலையில் ரகசியமாக திருமணம் நடந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.இவர்களது திருமண வரவேற்பு விழா வேலூர் அருகே ரங்காபுரம் கிருஷ்ண மஹாலில் நேற்று மாலை நடந்தது.

மஹிந்தரை சமாதானப்படுத்தும் முனைப்பில் மன்மோகன் சிங்

இலங்கைக்கு எதிராக ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், சம நிலையைக் கொண்டுவர இந்தியா முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றதாக, இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, இப்போது முதல் முறையாக தனது நிலைப்பாட்டுக்கான காரணம் குறித்து, இலங்கை அரசுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.

கடந்த 19-ம் தேதி இலங்கை ஜனாதிபதி எழுதிய கடித்தத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங் இந்தக் கடித்தத்தை எழுதியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 24, 2012

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்?

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததாக அர்த்தம் இல்லை . ஏனெனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையின் எதிர்கால நல்வாழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில் சில வாசகங்களை இந்தியா சேர்த்த செயல் அதற்கு ஆதாரம்.

தமிழக அரசின் தொலைநோக்கு கனவு நிறைவேறுமா?

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தில், அடுத்த 11 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் 15 லட்சம் கோடி ரூபாயில், பெரும்பாலும் தனியார் முதலீடுகளை சார்ந்தே உள்ளதால், அரசின் கனவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டமைப்புக்கு முக்கியத்துவம்: மொத்தம் எதிர்பார்க்கப்படும் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 13.25 லட்சம் கோடி ரூபாய், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக எதிர்பார்க்கப்படுபவை. இதில், எரிசக்தித் துறையில் 4.5 லட்சம் கோடி, போக்குவரத்துத் துறையில் 3.7 லட்சம் கோடி, தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு 1.6 லட்சம் கோடி, நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு 2.75 லட்சம் கோடி என, எதிர்பார்க்கப்பட்டுள் ளது. இது தவிர, பொது மற்றும் சமூக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, இதை 2023க்குள் செயல்படுத்த வேண்டுமானால், வரும் நிதி ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், 1.2 லட்சம் கோடி முதலீடுகள் வர வேண்டும்.

பெட்ரோல் தாருங்கள்: இந்தியாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது

பாகிஸ்தானில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக பெட்ரோல் சப்ளை செய்யும்படி, இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது.

எரிவாயு துறை தொடர்பான ஆசிய உச்சி மாநாடு டில்லியில் நடந்தது. இதில், பாகிஸ்தான் சார்பில், பெட்ரோலிய துறை செயலர் முகமது இஜாஜ் சவுத்ரி கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் தற்போது பெட்ரோலிய தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

அணு ஆயுதங்களற்ற உலகத்துக்கு இந்தியா ஆதரவு: பிரதமர்

அணு ஆயுதங்களற்ற உலகத்துக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்பதை சியோல் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் வலியுறுத்துவேன்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை காலையில் தென் கொரியா செல்கிறார். தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு செல்லும் பிரதமருக்கு, ஞாயிற்றுக்கிழமை காலையில் அதிபர் மாளிகையான "ப்ளூ ஹவுசில்' வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிபர் லீ மியூங் பக்குடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதன் முடிவில், இந்திய-தென் கொரிய நாடுகளிடையே பயணம் செய்யும் இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு விசா நடைமுறைகளை எளிமையாக்குவது, பரஸ்பர பிராந்திய, பொருளாதார, கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்தாகவுள்ளன.

சிறீலங்காவிற்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்காவின் ஒபாமா அரசாங்கம் சிறீலங்காவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமேன அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.
 

சிறீலங்காவிற்கு எதிராக மாறிய இந்தியாவின் தீர்மானம்

மனித உரிமை பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் பிரேரனை தொடர்பிலான வாக்கெடுப்பு தொடர்பில் இந்தியா இறுதி நேரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் எமக்கு நேரடியாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸிற்கான சிறீலங்கா தூதுவர்  தயான் ஐயதிலக்க தெரிவித்துள்ளார்.

யோசனை மீதான வாக்கெடுப்பு முன்னர், இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதால், சிறீலங்காவிற்கு ஆதரவான வாக்குகள் வழங்கப்படுவதில், இந்தியாவின் இந்த தீர்மானம் நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 
 

எந்த சக்திக்கும் அடிபணியப் போவதில்லை : ஐனாதிபதி மஹிந்த எச்சரிக்கை

ஐ.நா மனிதஉரிமைக்ள பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினால், நாட்டின் இறைமைக்கோ அல்லது ஒருமைப்பாட்டுக்கோ அச்சுறுத்தல் ஏற்படாது என மஹிந்த ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை.

அதேவேளை சிறிலங்கா அரசின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவரை உருவாக்க அமெரிக்கா முயற்சி! : வீரவன்ச

அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஒரிசாவில் அரசியல்வாதி ஒருவர் கடத்தப்பட்டார்


இந்திய மாநிலம் ஒரிசாவில் அரசியல்வாதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். ஒரிசா சட்டசபை உறுப்பினரான ஜினா ஹிக்காகா இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். காரின் ஓட்டுனரையும் காவலரையும் விட்டுவிட்டு சட்டசபை உறுப்பினரை மட்டும் ஆயுததாரிகள் கடத்திச்சென்றுள்ளனர்.தலைநகர் புபனேஷ்வரில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இடமொன்றில் இவர் காரில் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை அகதிகளுக்காக 25 கோடி ரூபாய் திட்டம்


தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசிதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அகதிகள் முகாம்களில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 4 கோடியே 33 லட்சம் ரூபாயையும், அகதிகள் தங்கியிருக்கும் வீடுகளை மேம்படுத்த 20 கோடியே 66 லட்சம் ரூபாயையும், அகதிகளைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும், அகதி மாணவர் கல்வி ஊக்கத் தொகைக்காக 21 லட்சம் ரூபாயையும் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.ஏற்கனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உள்ள மருத்துவக் காப்பீட்டின் கீழ் தற்போது இலங்கை அகதிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்: மெர்வின் சில்வா


இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கை அரசை விமர்சிப்பதாக அரசு கருதும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவன்ங்கள் குறித்து இலங்கை அரசும், அரச கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடக நிறுவனங்களும் செய்து வரும் எதிர்ப்பு பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக தீவிரப்பட்டுவருகிறது.

மிரட்டல்கள் குறித்து ஐ நா கவலை


இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திற்காக கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களை இலங்கைத் தூதுக் குழுவினர் மிரட்டியதாக ஐ நா மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.
அதே நேரம் ஜெனிவாவில் இருக்கும் இலங்கைத் தூதரின் அலுவலகத்திற்கு அநாமதேய மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து காவல் துறை விசாரிப்பதாகவும் நவி பிள்ளையின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரை இலங்கையில் அமைச்சர் ஒருவரும் அரசு ஊடகங்களும் மிரட்டுவதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.

ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசு காட்டம்


இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பிரச்சினை அடிப்படையில் இல்லாமல், சில நாடுகளுக்கிடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் மற்றும் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கையின் தாற்காலிக வெளியுறவு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசின் நிலைப்பாட்டை விளக்கி இலங்கை நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை அமைச்சர் குணசேகர தாக்கல் செய்தார் .

Friday, March 23, 2012

விற்பனைக்கு தயாராகும்மைக்கேல் ஜாக்சன் வீடு

பிரபல பாப் இசை பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் வீடு, விற்பனை செய்யப்பட உள்ளது.அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், 2009ம் ஆண்டு, அதிக போதை மருந்தை உட்கொண்டதன் காரணமாக மரணமடைந்தார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பிவேர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் தான், இவர் கடைசியாக வசித்தார்.ஏழு படுக்கை அறைகளும், 13 கழிப்பறைகளும், ஏழு கார் நிறுத்தும் இடங்களும் கொண்ட இந்த வீடு, தற்போது விற்பனை செய்யப்பட உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 17,000 சதுர அடி கொண்ட இதே வீடு விற்பனைக்கு வந்தது. 

ஆபிரிக்கா நாடான மாலியில் புரட்சி - அரசை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

ஆபிரிக்கா நாடானா மாலியில் அந்நாட்டின் அரசை கைப்பற்றியுள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து பிரிந்து சென்றவர்களே இவ்வாறு புரட்சியில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.

மேலும் மாலியில் அரசியலமைப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க நிறுவனங்கள் கலைக்கப்பட்டள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் இன்று தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவே தீர்மானத்தை ஆதரித்தோம்: பிரதமர்

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம்'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம், என பிரதமர் மன்மோகன்சிங் பார்லிமென்ட்டில் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப, ஜெனிவாவில் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்தது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நேற்று குறிப்பிடுகையில், "இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம். மற்றபடி இலங்கையின் இறையாண்மையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட சாதக பாதகங்களை ஆராய வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு கவுரவம், நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் அமைய வேண்டும்' என்றார்.

இலங்கையில் தனிஈழம் உருவாவதே எனது கனவு: கருணாநிதி

இலங்கையில் தனிஈழம் உருவாவதே எனது கனவு,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா., கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் வெற்றியைத் தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்ததற்கு, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலம், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கு, உலக நாடுகள் முன், தலை குனிந்து இலங்கை பதில் சொல்ல வேண்டியுள்ளது. இதன் மூலம், இது போன்ற கொடுமைகள் இனிமேல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் உருவாவதே எனது கனவு. ஆனால், அது, இதுவரை நிறைவேறாததற்கு அங்குள்ள போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தமே காரணமாக அமைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜெனீவாவில் படுதோல்வி, வன்னியில் வெறியாட்டம்

ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் படுதோல்வி அடைந்த சிறீலங்கா, தனது கோர முகத்தை தமிழர் பிரதேசங்கள் காட்ட ஆரம்பித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்ததையிட்டு தமிழர் இளைஞர்கள் வெற்றிக் கொண்டாங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை பட்டாசு வெடிகள் கொழுத்தி சிறப்பித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறீலங்கா இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.