flashvortex.

Friday, March 23, 2012

பிரபாகரனை காக்க அமெரிக்கா முயற்சித்ததாம்!! : விமலின் புதுக் கதை

நந்திக்கடல் களப்பில் இறுதி போர் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், கொழும்பில் மற்றுமொரு யுத்தம் நடைபெற்றதாகவும் கொழும்பில் நடைபெற்ற யுத்தத்தை ஜனாதிபதி எதிர்கொண்டதால், நந்திக்கடல் களப்பில் நடந்த யுத்தத்தில் படையினர் வெற்றிப்பெற முடிந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்தை தோற்கடிக்கும் இறுதி கட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே உட்பட பல நாடுகள் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை கொடுத்தன.  சர்வதேச சமூகம் தமது சுவர்களில் நமது கால்களை கட்டி வைத்திருந்தனர். அந்த விலங்கை உடைத்தெறிந்து விட்டு, முன்னோக்கி சென்று, பயங்கரவாதத்தை முற்றாக எம்மால் தோற்டிக்க முடிந்தது. அப்போது, இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபர்ட் ஓ பிளேக் குறுஞ் செய்தி அனுப்பி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக பிரபாகரனை காப்பற்ற முயற்சித்தார்.

இங்கிலாந்து, பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்க முயற்சித்தனர். எனினும் அந்த அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிப்பணியவில்லை. 

நந்திக்கடல் போரை ஊடகங்கள் மூலம் மக்கள் அறிந்திருந்த போதிலும், கொழும்பில் நடைபெற்ற சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கும் போரை எவரும் காணவில்லை.  இந்த அழுத்தங்கள் அன்றில் இருந்து வந்ததால், நாங்கள் அதற்கு அடிப்பணியவில்லை. இதற்கான பழிவாங்கும் தேவையே அமெரிக்காவுக்கு தற்போது உள்ளது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment