flashvortex.

Tuesday, May 29, 2012

இப்படியே குறைந்தால் இறுதிக்கிரியை என்னவாகும்?





கொள்ளிக்குடம் எடுத்து சுடலையிலே சுற்றிவர, அதிலே துளையிட்டு மனிதனின் இறுதிச்சடங்கை முடிக்க பயன்பட்டு வரும் மட்பாண்டத்தை இன்று  யாருமே கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. நாகரிகத்தின் மாற்றத்தில் பழையவற்றை மறந்து புதியவற்றை நாடும் மக்களின் செயற்பாடுகளில் எமது பழைய பண்பாடுகள் மழுங்கடிக்;கப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்ட மட்பாண்டங்களை இன்று மக்கள் தள்ளி வைத்துவிட்டு அலுமீனியத்தை நாடிச் செல்கின்றனர். மட்பாண்டத்தின் பாவனையும் உற்பத்தியும் குறைவடைற்து வருகின்ற நிலையில் அலுமீனியத்தின் பாவனையும் சில்வரின் பாவனையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.



மட்பாண்டத்தை மக்கள் தமது பாவனையில் இருந்து தவிர்த்து வந்தாலும் மனிதன் இறந்தபின்பு இறுதிச் சடங்குக்கு மட்பாண்டம்தான் பயன்பட்டு வருகின்றது. மட்பாண்டத்துக்கு பதிலாக அலுமீனியத்தையோ சில்வரையோ பயன்படுத்த முடியாது. குரதிக்கு மாற்றீடு இல்லை என்பது போல மனிதனின் ஈமக்கிரியைக்கும் மட்பாண்டத்தைத் தவிர எதுவுமில்லை.

'எமது கிராமத்தில் அதிகமானவர்களின் தொழில் மட்பாண்டம் செய்வதாகத்தான் இருந்தது. இது எல்லாம் ஒரு காலம். இப்போது என்னைத் தவிர யாருமே இந்தத் தொழிலை செய்வது கிடையாது. இதற்கு இரண்டு முக்கிய காணங்கள் உள்ளன. ஓன்று மட்பாண்டம் செய்வதற்கான களி இல்லாமல் போய்; விட்டது. முதல் ஒட்டி சுட்டான், மாயக்கையில் தான் களி எடுத்து தொழிலை செய்து வந்தோம். இப்போது களி எடுக்கமுடியாது என்றதால் இத்தொழிலை செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மற்றது  மட்பாண்டத் தொழிலுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்;டது. இதனால் இத்தொழிலை செய்தவர்களும் வேறு வேறு துறைகளுக்கு நாடிச் சென்றுவிட்டார்கள். மட்பாண்டம் வாங்கும் மக்களின் தொகையும் குறைந்து விட்டது. நான் மட்பாண்டங்களை சுவிஸ் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்திருந்தேன். தற்போது களி இல்லாத பிரச்சனையால் ஏற்றுமதி செய்வதை விட்டுவிட்டேன்.'எனறு மிக வருத்தத்துடன் குசப்பிட்டியில் தற்போது மட்பாண்டம் செய்துவரும் திருமால் தெரிவித்தார்

மட்பாண்டத்துக்கு பெயர் போன இடங்களிலும் இன்று மட்பாண்டங்களை செய்யாமல் வேறு துறைகளுக்குள் கால்பதிக்கின்றனர். மட்பாண்டங்கள் செய்வதில் பெயர்போன இடங்களில் ஒன்று குசப்பிட்டி. இக் கிராமம் பருத்தித்துறை-.மந்திகையில் இருந்து 1மஅ தூரத்தில் அமைந்துள்ளது. மட்பாண்டம் என்றாலே குசப்பிட்டி என்று சொல்லும் அளவுக்கு இருந்த கிராமத்தில் ஒரே ஒருவரே தற்போது மட்பாண்டத்தை செய்து வரும் நிலை வேதனையளிக்கக் கூடியது.

இக்கிராம மக்களின் தொழிலாக இருந்த மட்பாண்டத் தொழிலை இவர்கள் தூரமாக வைத்துள்ளனர். இதற்கு மட்பாண்டங்கள் செய்வதற்கு தேவையான களி இல்லாமல் போனது ஒருபக்கம் இருக்க இத் தொழிலை செய்து வந்தவர்கள் வேறு துறைகளுக்குள் கால் பதிக்க தொடங்கிவிட்டனர்.
இன்றைய தலைமுறையும் மட்பாண்டத்தில் சமையல் செய்து சாப்பிடுவதை விரும்புவது இல்லை. நண்பர்கள் மத்தியில் தாம் மட்பாண்டத்தை வீட்டில் பயன்படுத்துகிறோம் என்றால் அது மரியாதையாக இருக்காது என்று நினைப்பதினாலும் மட்பாண்டத்தை ஒதுக்குகின்றனர். மட்பாண்டம் ஒன்றை செய்வதற்கு ஒரு குயவன் எவ்வளவு வியர்வை சிந்துவான். ஆனால் எமது இளம் சமுதாயமோ மட்பாண்டத்தை மதிக்காத சூழல் கவலைக்குரிய விடயமாகும்.

குசப்பிட்டியில் பல விழுதுகள் விட்ட ஆலமரமாய் இருந்த மட்ப்பாண்டக் கைத்தொழில் இன்று அறுகம்புல் அளவும் இல்லாத நிலையில் வந்து கொண்டிருக்கின்றது.  மக்களும் மட்பாண்டத்தை தமது பாவனைகளுக்கு எடுத்துக் கொள்வதைம் குறைத்து விட்டனர்.

'பெண்கள் இந்தக்காலத்தில் மட்பாண்டத்தில் சமைப்பதை விரும்புகிறார்கள் இல்லை. இத்தோடு மட்பாண்டத்தின் உற்பத்தியும் குறைந்து விட்டது. எங்கள் வீட்டிலையும் அலுமினியத்தில் தான் சமைக்கின்றார்கள். இப்பொழுது இருக்கின்ற சந்ததிக்கு மட்பானையில் சமைக்கிறதைப்பற்றி என்ன தெரியும்' என்று குசப்பிட்டியைச் சேர்ந்த 75 வயதுடைய சிவநேசன் கேள்வி  எழுப்பினார்.

 '; மண்பானையை  விட அலுமீனியம்  கழுவிப் பாவிப்பதற்கு சுகமானது. மண்பானையை காஸ்சில் வைத்து சமைக்க முடியாது. இந்த காலச் சூழ்நிலைக்கு அலுமினீயம்தான் சிறந்தது. பெண்கள் வேலைக்கு போகின்றதினாலும் அலுமீனியத்தைத் தான் எல்லோரும் விரும்புகின்றார்கள்' என்று அதேஊரைச் சேர்ந்த 28 வயதுடைய வித்தியா கூறினார்.

குளிர்சாதனப்பெட்டியில் தண்ணீர் குடித்து வாழும் மக்கள் ஓசோன்படையில் ஓட்டைய வந்துபின்பாவது மண்பானையில் தண்ணீர் குடிக்காமல் குளிர்சாதனப்பெட்டியையே நாடுகின்ற நிலையில் தற்போதும் மண்பானையில் ஒருவர் தண்ணீர் குடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்.  பழையகாலத்து மக்களுக்குதான் மட்பாண்டத்தினை பற்றிய அருமை தெரியும் என்பதனை  உபயகதிர்காமத்தைச் சேர்ந்த 90 வயதுடைய திருமதி செல்லையா கூறுகையில் இருந்த தெளிவாகியது. அவர் 'இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? மண்பானையில் சமைத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் உடம்புக்கு எந்த வருத்தமும் வராது. மண்பானையில இருக்கின்ற தண்ணீர் எப்போதும் குளிர்மையாகத்தான் இருக்கும். நான் இப்போதும் தண்ணீர் குடிப்பது மண்பானையில் தான் இதைவிட மண்சட்டிகளில் சமைத்து சாப்பிடுற ருசி அலுமீனியத்தில வராது. மண்பானையின் கீழே உமியை வைத்து அதற்கு மேலே உப்புப்போட்டு வைத்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தண்ணீர் குடிப்பதைப்போன்று குளிர்மையாக இருக்கும்' என்றார்.

அந்தக்காலத்தில் ஆண்கள் வீட்டிலே சண்டைபிடித்தால் உடைப்பதென்னமோ மண்பானையை தான். ஆயிரம் பொன்கொடுத்தாலும் உடைந்தவற்றை ஒட்டமுடியாது. அலுமீனியத்தை அடித்து நொருக்கினாலும் அதை மீண்டும் சரி செய்துவிடலாம். இதனால்தான் பெண்கள் இன்று மண்பானையை விட்டு அலுமீனியத்தை வாங்குகின்றார்களோ? மட்பாண்ட அழிவிற்குதெரிற்தோ தெரியாமலோ ஆண்கள் காரணம் இருக்கிறார்கள்.

கிராமங்களில்  இருப்பவர்கள் மண்சட்;டிகளில் இன்றும் சமைக்கின்றார்கள். முக்கியமான விரதங்களுக்கு புதிய மட்பாண்டங்களில் சமைக்கின்றார்கள. இன்றும் நேர்த்திக்கடன்களின் போது வல்லிபுர கோயிலில் பொங்குவதற்கு மண்பானையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். காலத்தின் ஒட்டத்தில் பழையன அழிந்து போனாலும் மட்பாண்டம் பயன்படுத்துபவர்கள் இருக்கும்வரை இத்தொழில் அழிந்து போகாது. குசப்பிட்டியில் இத்தனைபேர் செய்த தொழிலை தற்போது ஒருவரே செய்து கொண்டிருப்பதைப்போல மட்பாண்டத்தை பயன்படுத்துபவர்கள் இருக்கும் வரை எங்காவது ஒரு இடத்தில் மட்பாண்டத்தை செய்பவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

No comments:

Post a Comment