flashvortex.

Tuesday, January 31, 2012

மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகாகும்பாவிஷேகம்

அருள் மிகு மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகா கும்பாவிஷேகம் எதிர்வரும் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ் நாயன்மார்கட்டு அரச விநாயகர் ஆலய முதல்வர் சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள் பிரதம குருவாக இருந்து மகா கும்பாவிஷேகத்தை நடாத்தவுள்ளார். தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

'குருதிக்கொடை மூலம் உயிர்காப்போம் வாருங்கள்' இரத்தவங்கி அறிவிப்பு

யாழ் போதனா வைத்திய சாலையில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

'குருதி பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. எல்லா வகை குருதியும் தேவைப்படுகின்றது. குருதிக் கொடையாளர் வருகின்றார்கள். ஆயினும் இன்னும் குருதி கொடையாளர் முன்வந்து குருதி வழங்க வேண்டும்.' என வைத்தியர் திருமதி தாரணி குருபரன் தெரிவித்தார்.

Sunday, January 29, 2012

சவேந்திர சில்வாவுக்கான பதவி - சீற்றத்தில் சர்வதேசம்!

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அனைத்துலக ரீதியாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக மேற்குலக நாடுகள் இந்த நியமனத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது எனவும் அவை கருத்து வெளியிட்டுள்ளன.

Saturday, January 28, 2012

தோல்வி அடைந்த இந்தியா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 298 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது.
 
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 604 ஓட்டங்களும், இந்தியா 272 ஓட்டங்களும் எடுத்தன. அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்து 333 ரன்கள் பின்தங்கி இருந்தது.
 

30 வருட பிரச்சினைக்கு ஒரு நாளில் தீர்வு காண முடியுமா? : ஐனாதிபதி மஹிந்த கேள்வி

எத்தகைய தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான அபிவிருத்தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது. 30 வருட பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண்பது கடினம் எனினும் முறைப்படி அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

13 ஆயிரம் ஓட்டங்களை கடந்து பொண்டிங் சாதனை

Paristamilஅடிலெய்டில் நடக்கும் 4வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் ரிக்கி பொண்டிங் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று 81 ஓட்டங்களை கடந்த போது 13 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
 

Friday, January 27, 2012

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் மீது அரசு நடவடிக்கை

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் உள்பட நான்கு விண்வெளி விஞ்ஞானிகள், அரசுப் பணி எதையும் மேற்கொள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது.
இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆந்த்ரிக்ஸுக்கும் தனியார் நிறுவனமான டேவாஸுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பத்தில், மாதவன் நாயர் உள்ளிட்டோரின் பங்கு குறித்து ஆய்வு நடத்திய பிறகு அரசு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Thursday, January 26, 2012

டாக்டர் A.P.J அப்துல் கலாமை பார்க்க சென்ற போது!!!!!!!!!!!

உலகம் அறிவியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொது அமெரிக்கர்களையே தன்னை திரும்பி பார்க்க வைத்த மூன்றாம் உலக நாட்டின் அறிவியலாளன் அப்துல் கலாம் என்றால் மிகையாகாது.

கனவு காணுங்கள் நான் கனவு காணுகிறேன்......பறந்து கொண்டிருப்பதைப் போல பறந்து கொண்டிருக்கின்றேன் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகள் இன்று யாழ் மண்ணில் ஒலித்தது.........

Friday, January 20, 2012

உங்கள் காதல் எப்படி… கண்டுபிடிக்கலாம் இப்படி..

Paristamilகாதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரிசோதனை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக்கத் தொடங்கினால் உங்கள் துணையை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
 

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?

Paristamilபெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை.
 

Thursday, January 19, 2012

பசுமையான தருணங்கள்............

படிக்கின்ற காலத்தில் நண்பர்களுடன் இருக்கும் தருணங்கள் வாழ்கையில் மறக்கமுடியாதது. அதிலும் பத்து நாட்கள் என் நண்பர்களுடன் கழிந்த பொழுதுகள் எத்தனை காலம் சென்றாலும் பசுமையான நினைவுகளாக இருக்கும்.

கனாக்காணும் காலங்கள் கூட எமது கல்லுரிக்காலத்திடம் கையேந்தும். 

Friday, January 13, 2012

தமிழர் திருநாளம் தைத்திருநாள்!

தமிழ் இனத்திற்கென சிறப்பாக உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது. தம்மை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றிப் பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டுப் படைத்துஅகமகிழ்வது தமிழர் பண்பாடுஇதற்காகவே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

காதல் திருமணம்.............

சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.
 

யாழ்பாடிய மண்ணில்பண்பாடிய பறையொலி

தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடலரசு வேணுவுடனான ஒரு சந்திப்பு.......



காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் ‘பழையன களைதலும் புதியன புகுதலும்” என்ற முதுமொழி  தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது.

வாழ்க்கையில் வசந்தத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மக்கள்!

அரியாலை வசந்த புரம் மக்கள் பலவருட இடப்பெயர்வின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் இதுவரை அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.  20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வசந்தபுர மக்கள் குடியேறியுள்ளனர்.

Thursday, January 12, 2012

ஊடகப் பயணத்தில் என் அனுபவம்........

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு சென்றிருந்தோம்.

செல்லும் நாளுக்கு ஒரு வாரத்திற்க்கு முதலே ஆயத்தங்கள் செய்யத் தொடங்கிவிட்டோம். கொண்டு செல்லும் பொருட்கள் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?, பண விடயம், உணவு ஏற்பாடு என சகல விடயங்களும் செல்வதற்க்கு இரு நாட்களிற்க்கு முதல் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டது.

செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி.அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாணவர்கள் அனைவரும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் ஒன்றாகினோம். .எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன் அவர்கள் வந்திருந்தார்.

இரவு 7.30 மணியளவில் யாழிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டோம் செப்ரெம்பர் 07 கொழும்பில் கண்விழித்தோம். எமக்கென பதிவுசெய்யப்பட்ட கொழும்பு தழிழ்ச்சங்க விடுதியினுள் சென்றோம்.

Wednesday, January 11, 2012

அரசாங்க உத்தியோகத்தவர்களுக்கு கடன் அடிப்படையில் மரத்தளபாடங்கள்!

அரசாங்க உத்தியோகத்தவர்களுக்கு கடன் அடிப்படையில் அரசாங்க மரக்கூட்டுத் தாபனத்தினால் செய்யப்பட்ட மரத்தளபாடங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இங்கு வேம்பு பாலை முதிரை கிறாண்டிஸ் தேக்கு போன்ற 100வகையான மரங்களினால் செய்யப்பட்ட மரத்தளபாடங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

1லட்சம் பெறுமதியுள்ள வீட்டுக்குத் தேவையான மரத் தளபாடங்ளை 2பேரின் பிணையில் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம் என பிரதேச முகாமையாளர் சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.

மேலும் மக்கள் பாலை முதிரை தேக்கு போன்ற மரங்களையே விரும்புகின்றனர். நாங்கள் மக்களின் தேவைக்கேற்ப செய்து கொடுக்கப்படும் தளபாடங்கள் நல்ல மரங்களைக் கொண்டே செய்யப்பட்டுள்ளது. எனக் கூறினார்.

மேலதிகத் தகவல்களைப் பெற விரும்புகின்றவர்கள் 021-2220278 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Friday, January 6, 2012

தமிழ் படும்பாடு!!!!!!!!!!!

எந்த பாஷையானாலும் சொந்த பாஷையில் படி என்கிறார்கள் மொழி அறிஞர்கள். ஒவ்வொரு இனத்தவரின் தொன்மையையும் அடையாளத்தையும் காட்டி நிற்பது கலாச்சாரமும் மொழியும் மட்டுமே. அந்தவகையில் தமிழனின் கலாச்சாரம்தான் மாறி விட்டது என்றால் இப்பொழுது தமிழ் மொழியில் பிற மொழிக்கலப்பும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.   இதனால் அண்மைக் காலமாக தமிழர் அடையாளமிழந்து வருகின்றனர். தன்னையே மறந்து வேறு ஒன்றாய்க் கிடக்கின்றனர். தாய்மொழியைத் தாழ்த்தி பிறமொழியை உயர்த்துகின்றனர்.

Wednesday, January 4, 2012

பெண்களுக்கு உதவிபுரியும் மாதர் சங்கங்கள்!

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது மூச்சுக்கு மூச்சு ஆண்களால் முன்வைக்கப்படும் புகழ்ச்சி. ஆனால் உண்மை நிலை என்பது வழமைக்கு மாறாகவே உள்ளது. எமது நாட்டை பொறுத்தவரை குறிப்பாக தமிழ் சமுகத்தை பொறுத்தவரை ஆணாதிக்கம் என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்கள் மீது தாக்கம் செலுத்துகின்றது. பெண்ணின் சபை உரிமைகள் மீறப்படுகின்றன. இந்த மறுப்பின் விளைவும் பெண்களின் எழுச்சி மற்றும் தன்னம்பிக்கையின் அடுத்தபடியே மாதர் சங்கங்களின் தோற்றம். இச் சங்கங்கள் விவசாயம், விலங்கு, வேளான்மை, சிறுகைத்தொழில், மீன்பிடி போன்ற தொழில்களுக்கு இந்நிறுவனங்கள் கடனுதவிகள் வழங்குகின்றன. இக் கடனுதவியைப் பெற்று பெண்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோளாகும்.

மீள் குடியேறிய பின்னும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அரியாலை வசந்தபுர மக்கள்!


அரியாலை வசந்த புரம் மக்கள் பலவருட இடப்பெயர்வின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் இதுவரை அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.


1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.  20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வசந்தபுர மக்கள் குடியேறியுள்ளனர்.


1990களில் இந்த இடத்தில் 350 குடும்பங்கள் வரையில் இருந்துள்ளனர். யுத்தம் ஏற்படுத்திய தொடர் இடப்பெயர்வுகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நாடு கடந்தும் குடியேறிய மக்கள் கால மாற்றத்தால் அங்கேயே நிரந்தர வாசியாகவும் மாறிவிட்டனர். தற்போது சுமார் 38 குடும்பங்களைச்சேர்ந்த மக்களே அரியாலையில்  வசிக்கின்றனர். 


ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்களின் மலசலங்கள் இங்கே தான் கொண்டு வந்து புதைப்பார்கள் என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவித்தனர். இப்படிப்பட்ட இடத்தில் தான் நாம் வாழுகின்றோம் என அங்கிருந்த வேலு கூறினார்.


நாம் வசிக்கும் இடங்களுக்கு இன்னும் பட்டாவே அரசு தரவில்லை. இதனாலேயே இன்னும் வீடு கூட கட்ட முடியாத நிலையில் இருக்கின்றோம் என கூறினார்கள். 
பெரும்பாலானவர்களின் வாழ்வாதார தொழிலாக கடற்தொழில் உள்ளது. வார நாட்களில் மூன்று நாட்களே கடலுக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படுகின்றது. அதில் வரும் வருமானத்தைக் கொண்டே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஒரு வயிறு கஞ்சியே இவர்களுக்கு உணவாக இருக்கின்றது. 3 நாட்களின் வருமானத்தைக் கொண்டே 1கிழமைக்கான உனவை நாம் சாப்பிடுகின்றோம். அதிலும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தண்ணீர் குடித்து உறங்கின நாட்களும் உண்டு என மதிவதனி கூறினார்.


தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேறிய சந்தோசம் மட்டும் தான் முகங்களில் காணப்படுகின்றது. அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால் மனிதன் எவ்வாறு வாழ முடியும்? ஆனால் அரியாலை வசந்தபுர மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலே வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.....மழை காலத்தில் இருப்பதற்கே முடியாத நிலை இவர்களது வாழ்க்கை.....


அதைத்தவிர குடிநீர் கிணறுகள் மழைகாலத்தில் நிரம்பி வழிகின்றன. அக்கிராமத்துக்கே ஒரு குடிநீர் கிணறுதான் உள்ளது. 


பெண்பிள்ளைகள் இன்னும் நிரந்தரமாக வசிப்பதற்குரிய வகையி;ல் மலசலகூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. 38 குடும்பங்களுக்கும் ஒரே ஒரு மலசலகூடம் தான் இருக்கின்றது.


இவர்கள் எல்லோரும் ஏக்கத்துடனேயே தமது வாழ்க்கையை வாழ்கிறார்கள். எத்தனையோ பிரச்சனைகள் இவர்கள் மத்தியில்............இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?



மீள் குடியேற்றிய பின் மக்கள் வாழும் பகுதிகள்




















Tuesday, January 3, 2012

கோட்டையும் புனரமைப்பும்.......

யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு இதில் அடங்குகிறது.ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் 1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.

Monday, January 2, 2012

கிராமியங்களில் களைகட்டும் காவடி

  தொன்மை மிக்க மதமாக இந்து மதம் விளங்குகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த சைவ சமயத்துக்கும் காவடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கிராமிய கலை வடிவங்களாக கோலாட்டம், கரகாட்டம், செம்புநடனம், கும்மியாட்டம்,காவடி என்பன உள்ளன. இவற்றில் காவடி பற்றி நோக்குவது சிறப்பானதாகும்.
                   மாயோனும் சேயோனும் தொல்காப்பியத்தை கண்டுரைத்த பின்னரே காவடி என்ற பதம் உருவானது. காவூதடி என்ற பதம் மருவி காவடி என்ற பதமாக தோற்றம் பெற்றுள்ளது. காவடி பற்றி மறைமலைஅடிகளார் பல கருத்துக்கனை முன் வைத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் ஆதிவாசிகள் விலங்குகளை வேட்டையாடி காவுதடியில் கட்டி எட்டிய தூரம் வரை கொண்டு சென்றுள்ளார்கள். பாரம் தூக்கியாக பாவித்த காவு+தடியே காலப்போக்கில் முருகன் ஆலய பால் காவடியாக உருவம் பெற்றுள்ளது.