flashvortex.

Monday, March 19, 2012

24 மணி நேரத்தில் மாற்றம் வரும் காலம்: பிரணாப்

ஒரு சபையில் உருவாக்கப்பட்ட திட்டம், 24 மணி நேரத்தில் அடுத்த சபையில் மாற்றம் செய்யப்படும் நிலையை அனுசரித்து உருவாக்கப்பட்ட பட்ஜெட்' என்று குறிப்பிட்டார் பிரணாப் முகர்ஜி.

அதிக வரிகள் கொண்ட, எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் இல்லாத வகையில் 2012-2013ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பட்ஜெட் குறித்து நேற்று தொழில் துறை அதிபர்கள் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் வெளிப்படையாக பல கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: மத்திய பட்ஜெட் உருவாக்கியதில் அதிக கவனம் காட்டினேன். பார்லிமென்டில் உள்ளவர்கள் என்ன கூறுவர் என்ற எண்ணம், என் சகாக்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை என்ற எச்சரிக்கை, எது அவர்களை எதிர்க்கச் செய்யும் என்பதையெல்லாம் ஓரளவு கணித்து முடிவு செய்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. அதைத் தவிர, ஒரு சபையில் உருவாக்கப்பட்டு ஏற்கப்படும் விஷயம், அடுத்த சபையில் 24 மணி நேரத்தில் மாற்றம் செய்யப்படும் நிலைமை இருப்பது இன்றைய நிலை. அதையும் நான் யோசிக்க வேண்டியதாயிற்று. இடைக்கால வளர்ச்சி உருவாக, தேவைகள் அதிகரிக்கும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமைகள் உள்ளன. தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. பெட்ரோல் விலையை சந்தைக்கு ஏற்ப விற்க அனுசரிக்கும் முறை வந்தாலும், எண்ணெய் கம்பெனிகள் இழப்பைச் சந்திக்கின்றன.

எண்ணெய் மானியம் குறித்து ஒரு வழிமுறை தேட வேண்டும் என்ற கருத்து, பட்ஜெட்டில் உள்ளது. ஆகவே, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அனைவரது கருத்துக்களையும் அரசு கேட்டு வருகிறது. பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும். இந்த விஷயம் குறித்து கூட்டாக இணைந்து முடிவு எடுக்கப்படும். அதற்காக பட்ஜெட்டில் இது குறித்து எல்லா விஷயங்களையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தவிரவும், வீட்டுக் கடன் வசதித் திட்டங்களுக்கு உதவ, கிரடிட் கியாரண்டி திட்டத்தில் கிராமப்புற வீட்டு வசதிக்கு பட்ஜெட்டில் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் 15 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டினால், வீட்டுக் கடன் வசதியில் 1 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

No comments:

Post a Comment