flashvortex.

Tuesday, October 30, 2012

புத்துயிர் பெற்றுவரும் நெசவுக் கைத்தொழில்



ஆடைகள் உடுபிடவைகள் போன்றவற்றிற்கு இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாமே தமது ஆடைகளை நெய்து உடுத்த வரலாறுகள் உண்டு. அன்றைய காலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த நெசவுக் கைத்தொழில் இருந்துள்ளன.

பள்ளி இல்லாத கிராமம் கல்விக்கு ஏங்கும் சிறுவர்கள்


தெல்லிப்பளை கொல்லங்கலட்டி 22 வருடங்களின் பின் தமது சொந்த மக்களை பார்த்து பூரித்து நின்றது. அப் பூரிப்பில் மக்களும்.

ஆனால் வளம் கொழிக்கும்  இப் பூமியில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மீள்குடியேறி உள்ளனர் மக்கள். இங்கு தான் 5வயது சிறுமியான குலக்சிகாவின் உள்ளிட்ட  பல சிறுவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப்போகிறது.

Tuesday, October 23, 2012

அழிவடைந்த நிலையில் இரு நூற்றாண்டுகள் பழமை மிக்க தேவாலயம்


தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 196 ஆண்டுகள் பழமை வய்ந்த வரலாற்றுப் பெருமைமிக்க அமெரிகன் மிஷன் தேவாலயம் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

இன்னும்; நான்கே வருடங்களில் தனது 200 ஆவது வயதைத் தொடவுள்ளது இந்தப் பழம்பெரும் தேவாலயம்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடு இத்தேவாலயத்தின் வரலாறும் ஆரம்பிக்கின்றது.

மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வு மீளாதா??



நாட்டில் நடந்த யுத்தத்தின் பிறகு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றநிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ வேண்டிய சுழலுக்கு ஆளாகியுள்ளனர் அவ்வாறான ஒரு நிலையிலேயே தீவுப்பகுதி மக்களும் வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.

Sunday, October 14, 2012

வாழ்வும் சாவும்................




ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டேன். இறப்பதற்கும் தயாராகி விட்ட அந்த நொடி என்ன நினைத்து என்னை பிடித்திருந்த உடும்புக்பிடி நீங்கியதோ தெரியாது. மீண்டும் தப்பிவிடுவேன் என்ற எண்ணத்தோடு இரு கைகளினாலும் தண்ணீரை தள்ளினேன்.

Wednesday, August 1, 2012

வீரமாகாளியில் வீரவாள்

 யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சங்கிலிய மன்னன் கடைசி மன்னன் ஆவான். வீரத்துக்கு பெயர் போன மன்னன் என்றால் மிகையாகாது. இம் மன்னனோடு தொடர்பு பட்ட கோயில்களில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலும் ஒன்று.; நல்லூருக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ள இக் கோயிலானது 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

Sunday, June 3, 2012

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படம்


பாவம் குறுந்திரைப்படமானது இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை மனோ பிக்சர்ஸ் தயாரித்திருக்கின்றனர். 

Tuesday, May 29, 2012

ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.


பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.

பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.

இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??




நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.

இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.

இப்படியே குறைந்தால் இறுதிக்கிரியை என்னவாகும்?





கொள்ளிக்குடம் எடுத்து சுடலையிலே சுற்றிவர, அதிலே துளையிட்டு மனிதனின் இறுதிச்சடங்கை முடிக்க பயன்பட்டு வரும் மட்பாண்டத்தை இன்று  யாருமே கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. நாகரிகத்தின் மாற்றத்தில் பழையவற்றை மறந்து புதியவற்றை நாடும் மக்களின் செயற்பாடுகளில் எமது பழைய பண்பாடுகள் மழுங்கடிக்;கப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்ட மட்பாண்டங்களை இன்று மக்கள் தள்ளி வைத்துவிட்டு அலுமீனியத்தை நாடிச் செல்கின்றனர். மட்பாண்டத்தின் பாவனையும் உற்பத்தியும் குறைவடைற்து வருகின்ற நிலையில் அலுமீனியத்தின் பாவனையும் சில்வரின் பாவனையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி



சிறுவர்களின் மனதிலே இருக்கும் எதிர்பார்ப்புக்களையோ எண்ணங்களையோ யாருமே எளிதில் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அவர்களுக்கும் தமது மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.

Saturday, May 19, 2012

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!


Paristamilஎப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை... தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
 

காதல் திருமணம் செய்யுங்கள்! நிறைய நன்மையிருக்கு!!


Paristamilதிருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது.
 
பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.


Paristamilசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.

நம்மைப் பற்றி நமக்கு......


Paristamilநம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியும். நம்மைப் பற்றி தெரிந்ததை விட அதிகமாக அடுத்தவர்களைப் பற்றித் தெரியும். அதுவும் அடுத்தவரின் குறைகள் நம் கண்ணுக்கு நன்றாகவே புலப்படும். அதை நம் இயல்பாகவே நாம் கொண்டு விட்டோம். நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்த்து ரசிக்க மனம் ஆசைப்படுவதைப் போல, நம் அகத்தை நாமே உணர்ந்து ரசிக்க நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று சொன்னால், பெரும்பாலானோர், ஏதோ தெரியும் என்ற பதிலைத் தான் தர விழைவார்கள்.
 
நம்மைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளும் பட்சத்தில், நம்மால் நம் நிறை, குறைகளை சமமாக உணர முடியும். நம் நிறைகளை நாமே வாழ்த்தவும், குறைகளை நாமே சீர்திருத்திக் கொள்ளவும் பேருதவியாகத் தான் தன்னை உணர்தல் தேவைப்படுகிறது.

Sunday, May 6, 2012

சமூகத்தினால் தன்னிலை இழந்த தப்பாட்டம்



காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் 'பழையன களைதலும் புதியன புகுதலும்' என்ற முதுமொழி  தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது.  இதற்க்கு பறை சிறந்த எடுத்துக்காட்டு.பறை தமிழர்களின் பாரம்பரிய கலை ஆகும். இப் பாரம்பரிய கலை இன்று சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லோராலும் தாழ்த்திப் பார்க்கப்பட்டு வருகின்றது. இப் பறையை  தப்பாட்டம் என்று அழைப்பர்.

கருத்து சுகந்திரம்



ஒருவர் தான் விரும்பிய கருத்தை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. உரிமைகளும் சுகந்திரங்களும் என உலக நாடுகளில் மத்தியில் கூறிக் கொள்ளும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் மக்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளது யாருக்கு தெரியும்?

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகம் நிலைத்து விட்டது. மக்களுக்கு பூரண சுகந்திரம் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.

Sunday, April 22, 2012

காதலின் காயம் ஆறவில்லையென்றால் கொஞ்ச நாள் காலத்தின் கையில் உங்களை விட்டு விடுங்கள்



நாம் எத்தனையோ பெண்களை பார்க்கிறோம் பழகுகிறோம் ஆனாலும் நாம் பார்க்கும், பழகும் எல்லா பெண்களையும் நமக்கு பிடித்து விடுவதில்லை நமக்கு பிடித்தஒரு பெண்ணைதான் நாம் விரும்பி காதலியாக்கிக் கொள்வோம் அப்படிப்பட்ட அழகான ஒரு காதல் மலர்ந்து வருவது நமக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் அந்த வேளைகளில் இனி அவளுடனேயே ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட வேண்டும், அவளையேநம் வாழ்க்கையின் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று நமது விருப்பங்கள் நம்மிடம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும்

நமது மனதில் ஊடுருவி விட்ட அவளின் ஒவ்வொரு செயலும் நமக்கு பிடித்துவிடும்அவள் எதை செய்தாலும் அவளை குற்றம் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவிற்கு அவள் சொல்லும் சின்ன சின்ன பொய்களையும் தவறுகளையும் ரசித்து ரசித்து பழகிவிடுவோம் அப்படிப்பட்ட நாம் ஒரு நாள் அவளையே பிரிந்து விடுகிற கட்டாயம் ஏற்படும் போது அதனுடைய ஆழமான வலிகள் நம்மை எங்கேயோ தூரத்தில் கொண்டு சென்று விட்டு விடுகின்றது அங்கே எதுவும் நம்மை ஆறுதல்படுத்த முடிவதில்லை

பாகிஸ்தானில் மூத்த பத்திரிகையாளர் படுகொலை

பாகிஸ்தானிலிருந்து வெளி வரும் 'டாவ்ன்' பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான முர்தாஷா ரிஷ்வி கராச்சியின் தெற்கே உள்ள நகரமொன்றில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கழுத்து அறுத்துக் கொல்லப் பட்டுள்ளார்.

வியாழன் அதிகாலை  இவர் கொலை செய்யப்பட்டு நகரின் பாதுகாப்பமைச்சின் கட்டடத்துக்கு அருகில் உள்ள மாடி வீட்டின் மேல் மாடியில் போடப் பட்டிருந்தமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஸ்பெக்ரம் முறைகேடு விவகாரம் : கனிமொழியிடம் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு?

கலைஞர் தொலைக்காட்சிக்கு டெலிகாம் நிறுவனத்திடமிருந்து ரூ.233 கோடி கடன்  எந்த அடிப்படையில் கையாறியது என நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  விளக்கமளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 26ம் திகதி டெல்லியில் உள்ள அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களை அவர் கொடுக்க வேண்டுமென சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வியின் வங்கி கணக்குகள் மற்றும் கடன் பண பரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விபரங்களை அமலாக்க பிரிவிடம் தாக்கல் செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் தற்சமயம் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார்.

இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் கூறுவதென்ன?

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவினர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்கள்.

இலங்கையில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில், அங்கு மக்கள் மறுவாழ்வுப் பணிகளும், நீடித்து நிலைக்கக்கூடிய அமைதிக்கான வழிமுறைகளும் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காகவே தங்களது இந்தப் பயணம் அமைந்திருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Wednesday, April 18, 2012

நோர்வே படுகொலைகளை குற்றமாக கருத முடியாது : பிரெய்விக்

நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆண்டெர்ஸ் பிரேய்விக் 'தான் செய்தவை குற்றச்செயல்கள் அல்ல' என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கார்க்குண்டு தாக்குதல், மற்றும் உட்டோயா தீவில் தொழில்கட்சியின் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் என்பவற்றில் 77 பேர் பலியாகியிருந்தனர்.

இவ்விரு தாக்குதல்களையும் ஒற்றை மனிதராக மேற்கொண்டிருந்த பிரேய்விக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று (திங்கட்கிழமை) அவர் நீதிமன்றில் இரண்டாவது தடவையாக ஆஜர்படுத்தப்பட்ட போது,

Sunday, April 15, 2012

டோனி அறிவார்ந்த டெஸ்ட் தலைவர் இல்லை

மஹேந்திர சிங் டோனி அறிவார்ந்த டெஸ்ட் தலைவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாரூதீன் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வகையான போட்டிகளுக்கும் வெவ்வேறு தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென அஸாரூதீன் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஒருநாள் மற்றும்  இருபதுக்கு-20  கிரிக்கெட் போட்டிகளில் மஹேந்திர சிங் தோனி சிறந்த தலைவராக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்

உங்கள் செல்ல குழந்தைகளுக்கு பருவம் தவறாமல் வழங்கி வந்த போலியோ சொட்டு இனி வழங்க வேண்டியது இருக்காது. காரணம் இந்தியாவில் 17 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. போலியோ இல்லாத நாடாக உலக சுகாதர நிறுவனமும் இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நடப்பதுதான் கடைசி கட்ட போலியோ ஒழிப்பு சொட்டு முகாம்.

ஈழத்தில் நாம் கேட்பது வீடு அல்ல நாடு! : காசி ஆனந்தன்


நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்களக் குடியேற்றம் மிக கொடுமையாக தாயக மண்ணில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது ஈழத்தில் ஜம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொல்கின்றார்கள். நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் காசி ஆனந்தன்.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதை, சிங்கள மக்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை : முன்னாள் ஐனாதிபதி

தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அண்மைக்காலம் வரையில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தெரியாமலேயே இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

Saturday, April 14, 2012

பிரேசிலில் மனித மாமிசம் சாப்பிடும் நபர்கள் நடமாட்டம்


பிரேசிலில் உள்ள கரான்கன்ஸ் நகரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே போலீசார் அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் கரான்கன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
 

1514 பேரை பலிகொண்ட டைட்டானிக் கப்பல் விபத்து: நாளை 100-வது ஆண்டு நிறைவுநாள்


1514 பேரை பலி கொண்ட டைட்டானிக் கப்பல் மூழ்கி நாளையுடன் 100-வது ஆண்டு நிறைவடைகிறது. 'மிதக்கும் சொர்க்கம்' என்று அழைக்கப்பட்ட 'டைட்டானிக்' என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல், 10-ந் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கியது.
 
செர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குவினல் டவுன் (கோப்க்) வழியாக நியூயார்க்கை சென்றடைய போக்குவரத்து வழி வகுக்கப்பட்டிருந்தது.
 

வைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி?

எச்சரிக்கை! இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய கணினியில் ஒரு நல்ல Antivirus மென்பொருள் நிறுவி இருந்து அதை Update செய்து இருக்க வேண்டும்.

நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள்.சரி வைரஸ் தாக்கிய பைலை எப்படி மீளப்பெறுவது என்று பார்ப்போம்.

கருக்குழந்தைக்கு ஆபத்தாகும் அழகு சாதனப் பொருட்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அழகு சாதனங்களில் உள்ள ரசாயனங்களினால் கருக்குழந்தைக்கு புற்றுநோய் கூட ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.



உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் 100 கோடி டாலரை சம்பாதித்துள்ள இன்ஸ்டாகிராம்

அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை, "பேஸ்புக்' நிறுவனம், 100 கோடி டாலர் கொடுத்து வாங்க உள்ளது.புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம் இன்ஸ்டாகிராம். மொபைல் போனில் எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இன்ஸ்டாகிராம் சேவையை தற்போது மூன்று கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரபல ஆப்பிள் நிறுவனம், இன்ஸ்டாகிராம் சேவையை கடந்த ஆண்டு தனது ஐபோன் பயன்பாட்டில் இணைத்துக் கொண்டது.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் ஆயுத நூலகம் கண்டுபிடிப்பு

கிளிநொச்சியில் ஒரு தொகை யுத்த ஆயுதங்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபடித்துள்ளனர்.

வெடிபொருட்கள் மற்றும் பிற யுத்த ஆயுதங்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எனவும் குறித்த பிரதேசத்தை  அவர்கள் யுத்த ஆயுத நூலகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஷாருக் கானுக்கு அவமதிப்பு: அமெரிக்காவிடம் முறையிட அரசு முடிவு

அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தை இந்தியா சற்று கடுமையாக அணுகவுள்ளது. தடுத்து நிறுத்துவதும் பின்பு மன்னிப்புக் கேட்பதுமே அமெரிக்காவிற்கு வாடிக்கையாகிவிட்டது என்று இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதுபோன்ற விவகாரங்கள் தொடரக் கூடாது. இந்த விவகாரத்தை அமெரிக்க உயரதிகாரிகளிடம் கொண்டு செல்லப்போவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இயந்திரத்தனமாக மன்னிப்புக் கேட்பது போதாது என்றும் இந்தியா கருத்துக் கூறியுள்ளது. அமெரிக்க உயரதிகாரிகளின் நிலையில் இந்த விவகாரத்தை கொண்டு செல்லுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

Thursday, April 12, 2012

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்பதற்கான காரணம்


வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசயம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் இன்றைய இளைய தலைமுறைக்கு எளிதான காரியமாக உள்ளது.
 
பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங்கள் குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள்தான்.
 

Sunday, April 8, 2012

ராட்சத கோழி போட்ட குட்டி முட்டை : படங்கள் இணைப்பு


அதிசயங்கள் எப்படி நிகழுமென்று யாருக்கும் தெரிவதில்லை. நடக்கும் போது பல ஆச்சரியங்களை ஏற்படுத்ததான் செய்கின்றது. 

அந்தவகையில் உலகையே தன் பக்கம் பார்வையை திருப்பியுள்ள ஒரு ராட்சத கோழி.

Tiny என்ற பெயர்  கொண்ட உலகின் மிகவும் ராட்சத கோழி ஒன்று வெறும் 2 சென்டி மீ்ற்றர்கள் அளவில் முட்டை ஒன்றை இட்டுள்ளது.

Thursday, April 5, 2012

அதிக நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்? உயிருக்கு ஆபத்து!

அலுவலகத்தில் வேலை பார்ப்பது, தொலைக்காட்சி, கணணி முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழக மூத்த ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்.

45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.

ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.

உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.

த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.

அமெரிக்க கடற்படைக்கு ஆஸ்திரேலியா உற்சாக வரவேற்பு !

ஆஸ்திரேலியா வந்தடைந்த அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 200 வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தலைமையில் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடபகுதி துறைமுகமான டார்வின் நகரிலுள்ள றோயல் விமானப்படைத் தளத்தில் இன்று வந்திறங்கிய அமெரிக்கப் படையினரை வரவேற்றுப் பேசிய, ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர், அமெரிக்கப்படையினரின் வருகை, மிக உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது கையெழுத்தாகிய ஒப்பந்தத்திற்கு அமைவாக, அமெரிக்கப் படைகள் ஆஸ்திரேலியா வந்துள்ள. முதற்கட்டமாக தற்போது 200 கடற்படையினர் வந்திறங்கியுள்ள போதும், கட்டம் கட்டமாக இது அதிகரிக்கப்பட்டு, 2017 ல் 2500 படையினர் அங்கு இருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு


இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தின், குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. பொதுவாக சிங்கங்களால் வேட்டையாடப்படுகின்ற போதும், இந்த மமத் விலங்கு மனிதனால் வேட்டையாடப்பட்டிருக்கலாம், அல்லது நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லபப்ட்டிருக்கலாம் என இந்த யானையின் தோல் பாகங்களின் காயங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும் 10,000 வருடங்களுக்கு முன்னதாக இந்த மமத் வாழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

விற்பனையை 20 மடங்காக்க முயலும் RENAULT !! (வீடியோ)


பிரான்சின் RENAULT மகிழுந்து தயாரிப்பாளர்கள் தமது மகிழுந்து விற்பனையை இந்தியாவில் 2012ல் 20 மடங்காக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இரு புதிய வகை மகிழுந்துகளை அறிமுகம் செய்வதன் மூலம் தாம் இந்திய வாகனச் சந்தையில் நிலையாகக் காலூன்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தில் 1500 Renault மகிழுந்துகளை இந்திய வாகனச் சந்தையில் விற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்துக்குத் தடை நீங்கியது

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு விதிக்கப்பட்டிருந்த 10 நாள்கள் தடை நீங்கியது.

வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கலாம்.

சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் விஜயகாந்த் பேசும்போது அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு ரூ.1.20 கோடி கட்டணம் நிர்ணயித்தது போலீஸ்

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டுமென, காவல் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டி, ஐ.பி.எல்., நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் மனு அளித்திருந்தனர். வர்த்தக நோக்கில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள, கட்டணம் செலுத்த வேண்டுமென, போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு, ஐ.பி.எல்., நிர்வாகிகள் ஒப்புக் கொண்டதால், விரிவான போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2ஜி ஊழல்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு கோரிய 10 மனுக்கள் தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 மனுக்களில், பத்து மனுக்களை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், ஏழு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதில், பிரதமர் அலுவலகம் தாமதம் செய்தது தொடர்பான விவகாரத்தில், "அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் போன்ற பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிராக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள், அனுமதி வழங்கப்பட வேண்டும். கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டு, அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம். நான்கு மாதங்களுக்குள் கண்டிப்பாக அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி, அனுமதி கொடுக்காவிட்டால், நான்காவது மாதத்துக்கு பின், தானாகவே அனுமதி கிடைத்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

டில்லியை நோக்கி ராணுவம் அணிவகுத்தது ஏன்?ராணுவப் புரட்சி முயற்சி நடக்கவில்லை: மன்மோகன் சிங்

இந்திய ராணுவத்தின் இரண்டு படைப்பிரிவு, தலைநகர் டில்லிக்குள் கவச வாகனங்கள் சகிதமாக நுழைய முயன்றதாக வந்த செய்தி, உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசைக் கைப்பற்ற ராணுவம் நடத்திய சதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த செய்தியை பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகிய மூன்று தரப்புமே, அவசரமாக, "அடிப்படையற்ற தகவல்' என மறுத்துள்ளன. மத்திய அரசு முழு விளக்கமளிக்க வேண்டுமென்று பா.ஜ.,கோரிக்கை வைத்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் அருகில், இந்திய ராணுவப் படையின் ஒரு பிரிவு உள்ளது. 


லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் மற்றும் மொத்தம் 450 வீரர்களைக் கொண்ட இந்த படைப்பிரிவு வீரர்கள், கடந்த ஜனவரி 16ம் தேதி இரவு மற்றும் 17ம் தேதி அதிகாலை வேளையில், தலைநகர் டில்லிக்குள் நுழைய முயன்றது. ஹிசாரில் கிளம்பி, டில்லிக்கு அருகே உள்ள நஜப்கார் என்ற இடம் வரை வந்துள்ளது. அதேபோல, ஆக்ராவில் உள்ள பாராஸ் என்ற பாராசூட் ராணுவப் படையும், டில்லியை ஒட்டி அமைந்துள்ள பாலம் விமான நிலையம் அருகே உள்ள பகுதி வரை வந்துள்ளது. இந்த தகவல்களை, டில்லியில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழ் நேற்று காலை வெளியிட்ட செய்தியால், அரசு வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பை எட்டின. கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று தான் ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங்கின் வயது சான்றிதழ் குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. 

ஐனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக, மீண்டும் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு

ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவிற்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரின் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களான காசிப்பிளை மனோகரன், கலைச்செல்வன் மற்றும் ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகியோர் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடுந்திருந்னர். இவர்கள் சார்பில் சட்டத்தரணி புரூஸ் பெயன் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் நட்டஈடு வழக்குத் தொடுத்திருந்தார்.

அமெரிக்க செனற் சபையில் சிறீலங்கா விவகாரம்: அதிர்ச்சியில் மஹிந்த அரசு

சிறீலங்கா தொடர்பலான அறிக்கை ஒன்று அமெரிக்க செனற் சபையில் நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், சர்வதேச போர்குற்ற விவகாரங்களுக்கான உயர்நிலை அதிகாரி stephen rapp அவர்களினால் சிறீலங்கா தொடர்பிலான அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில பல நெருக்கடிகளை சந்திந்தித்து வரும் சிறீலங்கா தரப்புக்கு தற்போது அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையானது கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday, April 4, 2012

ஒசாமாவின் மனைவி, மகளுக்கு பாக்.,கில் ஒன்றரை மாத சிறை

இஸ்லாமாபாத் அல்- குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனின் மூன்று மனைவியர் மற்றும் இரண்டுமகள்கள் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்ததற்காக ஒன்றரை மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டு கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மூன்று மனைவியரும், மகள்களும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரும் காந்திய பொருட்கள்

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரது உடலிருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்த சிறிய அளவிலான மண், புற்கதிர்கள், மற்றும் காந்தியின் மேலும் சில பயன்பாட்டு பொருட்கள் இம்மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் வைத்து ஏலத்தில் விடப்படவுள்ளன.

இவற்றில் காந்தி பயன்படுத்திய வட்டவடிவான மூக்கு கண்ணாடி, மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட கைராட்டை,  காந்தி ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் எழுதிய கடிதங்கள், அவர் 1946ம் ஆண்டு லண்டனில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பனவும் ஏலத்தில் விடப்படவுள்ளன.

இந்தியா மீது சிறீலங்கா விரித்துள்ள புதிய தாக்குதல் களம்

தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு பயிற்சி பெற்ற 150 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறீலங்காவிற்குள் ஊடுருவி உள்ளதாக அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.

மேற்படி செய்தி இந்திய அரசுக்கு கடும் ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக புதுடில்லி இராஐதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன.

யாழில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லோட் நஸ்பி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ் ஆயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் அபிவிருத்தி, சுகாதாரம், மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.