flashvortex.

Saturday, March 24, 2012

சிறீலங்காவிற்கு எதிராக மாறிய இந்தியாவின் தீர்மானம்

மனித உரிமை பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் பிரேரனை தொடர்பிலான வாக்கெடுப்பு தொடர்பில் இந்தியா இறுதி நேரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் எமக்கு நேரடியாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸிற்கான சிறீலங்கா தூதுவர்  தயான் ஐயதிலக்க தெரிவித்துள்ளார்.

யோசனை மீதான வாக்கெடுப்பு முன்னர், இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதால், சிறீலங்காவிற்கு ஆதரவான வாக்குகள் வழங்கப்படுவதில், இந்தியாவின் இந்த தீர்மானம் நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாக இதன் போது, செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த தீர்மானம் காரணமாக சிறீலங்காவிற்கு ஆதரவாக வாக்களிக்க இருந்த நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அத்துடன் ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்திருந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன. 
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அப்பால் சென்ற விடயங்கள் அமெரிக்காவின் யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக சர்வதேச சட்டத்தை மீறியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் உதவியை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் அந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இதில் ஓரளவு பயங்கரமான நிலைமையை காண முடிவதாகவும்  சிறீலங்காவின் மீதான இந்த யோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இறுதி நடவடிக்கை என்ன என்ற இறுதி முடிவுக்கு வரமுடியவில்லை எனவும் தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment