flashvortex.

Saturday, March 24, 2012

பெட்ரோல் தாருங்கள்: இந்தியாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது

பாகிஸ்தானில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக பெட்ரோல் சப்ளை செய்யும்படி, இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது.

எரிவாயு துறை தொடர்பான ஆசிய உச்சி மாநாடு டில்லியில் நடந்தது. இதில், பாகிஸ்தான் சார்பில், பெட்ரோலிய துறை செயலர் முகமது இஜாஜ் சவுத்ரி கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் தற்போது பெட்ரோலிய தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

 இதற்காக, இந்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம். எங்களுக்கு தேவையான பெட்ரோலை சப்ளை செய்யும்படி, இந்திய பெட்ரோலிய துறை செயலரிடம் வலியுறுத்தியுள்ளோம். பெட்ரோல் தவிர, மற்ற எரிவாயுக்களையும், எதிர் காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு தேவை ஏற்படும் போது, இந்திய அரசை அணுகுவோம். இந்தியாவில் இருந்து, பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, சமீபத்தில் நீக்கப்பட்டது. இது, தற்போது எங்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது. இவ்வாறு முகமது இஜாஜ் கூறினார்.

பாகிஸ்தானுக்கு பெட்ரோல் சப்ளை செய்வதில், இன்னும் சில சட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகள் உள் ளன. இரு நாட்டு அதிகாரிகளும் இதுகுறித்து ஆலோசனை நடத்தியபின், பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்குகளில் இருந்து, பாகிஸ்தானுக்கு, டேங்கர் மூலமாக பெட்ரோல் சப்ளை செய்ய, இந்தியா முடிவு செய்துள்ளது.


No comments:

Post a Comment