flashvortex.

Saturday, March 31, 2012

இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரட் விலை அதிகரிப்பு


இலங்கையில் சிகரட் மற்றும் மது பானங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கான வரியை இலங்கை நிதி மற்றும் திட்டமிடலுக்கான அமைச்சு அதிகரித்ததனாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அனைத்து வகையான சிகரட்டுக்களின் விலையும் ஒரு ரூபாவால் உடனடியாக அதிகரிக்கப்படுவதாக சிலோன் டுபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது. அரசாங்கம் சிகரட்டுக்கான வரியை அதிகரித்ததனாலேயே விலை அதிகரிக்கப்படுவதாக அது கூறியுள்ளது.

அதேவேளை, மதுபானங்களுக்கான வரியும் அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பியரின் வரி 50 ரூபாவாலும், உள்ளூர் பியரின் வரி 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பியர் தவிர்ந்த ஏனைய போதை கூடிய மதுபானங்களின் விலை லீட்டருக்கு 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிகரட் மற்றும் மதுபானங்களின் வரியை அதிகரித்ததன் மூலம் மூன்று பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறமுடியும் என்று நிதி அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே வாகன இறக்குமதிக்கான தீர்வையையும் இலங்கை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலேயே இந்த தீர்வை அதிகரிப்பு அமலுக்கு வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது.
அத்துடன் எரிபொருட் பாவனையையும் இதன் மூலம் குறைக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment