flashvortex.

Sunday, April 15, 2012

டோனி அறிவார்ந்த டெஸ்ட் தலைவர் இல்லை

மஹேந்திர சிங் டோனி அறிவார்ந்த டெஸ்ட் தலைவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாரூதீன் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வகையான போட்டிகளுக்கும் வெவ்வேறு தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென அஸாரூதீன் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஒருநாள் மற்றும்  இருபதுக்கு-20  கிரிக்கெட் போட்டிகளில் மஹேந்திர சிங் தோனி சிறந்த தலைவராக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை குறைந்தளவிலான அறிவே அவரிடம் காணப்படுவதாக அஸாரூதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலைவர் பதவி அழுத்தம் மஹேந்திர சிங் தோனிக்கு காணப்படாத விடத்து அவரின் விளையாட்டில் மாற்றத்தை சிலவேளை அவதானிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை வைட் வொஷ் அடிப்படையில் இந்திய அணி அண்மையில் இழந்திருந்தது.

நம்பிக்கை மற்றும் தயார்படுத்தல்கள் குறைவாக இருந்தமையே இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணங்கள் எனவும் மொஹமட் அஸாரூதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒய்வு பெற்றுள்ள ராகுல் ட்ராவிட்டின் இடத்தினை நிரப்பக்கூடிய சிறந்த வீரர் ஹைதராபாத்தினைச் சேர்ந்த ரோஹித் சர்மா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா திறமையான ஒரு வீரர் என சுட்டிக்காட்டிய அஸாரூதீன் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

No comments:

Post a Comment