flashvortex.

Sunday, March 25, 2012

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு சலுகை: வாசன்

இலங்கையில் சிங்களர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள தமிழர்களும் விரைவில் அனுபவிப்பார்கள்,'' என மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன் மகன் நவீனுக்கும், அ.தி.மு.க., எம்பி தம்பித்துரை மகள் லாஸ்யாவுக்கும் சமீபத்தில் திருப்பதி திருமலையில் ரகசியமாக திருமணம் நடந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.இவர்களது திருமண வரவேற்பு விழா வேலூர் அருகே ரங்காபுரம் கிருஷ்ண மஹாலில் நேற்று மாலை நடந்தது.

இதில், கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு கண்ணியத்துடனும், நிதானத்துடனும் செயல்பட்டு ஐ.நா., சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முள் வேலியில் அடைபட்டுக் கொண்டிருப்பவர்களை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது.
சிங்களவர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள இலங்கை தமிழர்களும் விரைவில் அனுபவிப்பர். மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா மற்றும் வெளியுறவு செயலாளர், வெளியுறவுத் தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து கவனித்து வருகின்றோம்.இலங்கை விஷயத்தில் தொடர்ந்து இந்தியா கண்காணித்து கொண்டிருக்கின்றது. இலங்கை தமிழர்கள் பிரச்னையை தொடர்ந்து மத்திய அரசு அணுகி வருகின்றது.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், அல்லாபுரம் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஷம்மி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.வரவேற்பு விழாவிலும் தப்பித்துரை கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் தம்பித்துரை வரவேற்பு விழாவில் கலந்து கொள்கின்றாரா என்பதை உளவுத்துறையினர் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment