flashvortex.

Tuesday, March 20, 2012

திபெத் தீக்குளிப்புகளை விசாரிக்க சீனாவிடம் அனுமதி கோரும் ஆஸி.

திபெத்தில் நடந்து வரும் தீக்குளிப்புகள் பற்றி விசாரிக்க, உயர் அதிகாரி மற்றும் எம்.பி.,க்களை அப்பகுதிக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கும்படி, சீனாவிடம் ஆஸ்திரேலியா கேட்டுள்ளது.

திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஓராண்டில், 30 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆஸி., வெளியுறவு அமைச்சர் பாப் கார் நேற்று கூறியதாவது:திபெத்தில் நடந்த தீக்குளிப்பு விவகாரங்கள் குறித்து விசாரிக்க, சீனாவுக்கான ஆஸி., தூதர் பிரான்சஸ் ஆடம்சன் சீன அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.அதேபோல், ஆஸி., பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு ஒன்று, திபெத்திற்கு வந்து பார்வையிடவும் அவர் அனுமதி அளிக்கும்படி கேட்டுள்ளார்.சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத் மடாலயங்களைப் பார்வையிட, துணைத் தூதரும் அனுமதிக் கேட்டுள்ளார்.இவ்வாறு பாப் கார் தெரிவித்துள்ளர்.
ஆஸி.,யின் இந்த நடவடிக்கை, சீனாவை எரிச்சலுக்குள்ளாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை இதுவரை திபெத்திற்குள் அனுமதிக்காத சீனா வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை எவ்வாறு அனுமதிக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment