flashvortex.

Monday, March 19, 2012

சிறீலங்காவிற்கு எதிராக இந்தியா ஆதரவளிக்கும் : இந்திய பிரதமர் தெரிவிப்பு

சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் கூறுகையில், 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சிறீலங்காவில் நடந்த மனித உரி்மைகள் மீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து, பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

No comments:

Post a Comment