flashvortex.

Tuesday, March 27, 2012

பிரிட்டனை சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்


ஸ்காட்லாந்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வெயிலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அபெர்டீன்ஷயரில் உள்ள ஃபைவ் கேஸலில்(Fyvie Castle in Aberdeenshire) அதிகபட்ச வெப்பமாகப் 22.8 டிகரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1965ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 22.2 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தது. அதை விட அதிக பட்சமாக இந்த வருட வெயில் ஸ்காட்லாந்தை மிகவும் சிரமப்படுத்தியுள்ளது.

பிரிட்டன் முழுவதும் வெயிலில் கடுமையாக உள்ளது. ஐரோப்பாவின் தென்பகுதியில் உள்ள பார்சிலோனா, நைஸ், மஜோர்கர், போர்ச்சுக்கல்லில் உள்ள ஃபாரோ(Barcelona, Nice, Majorca and Faro in Portugal) ஆகிய பகுதிகளை காட்டிலும் பிரிட்டனில் மட்டும் தற்போது 20 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

மற்ற நாடுகளில் இந்த அளவிற்கு அதிகபடியான வெப்பம் பதிவாகவில்லை. காற்றுமண்டல ஆய்வு மையமான கிளேர் ஆஸ்டினில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் வெப்பம் அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உயர் அழுத்தமும் காணப்படுகிறது. சிறிய அளவில் மேகங்கள் காணப்படுவதால் இரவில் குளிர்ச்சி நிலவுகின்றது.

அடுத்த வாரம் இறுதியில் வழக்கமான 11-12 டிகரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்துக்கும், வேல்ஸுக்கும் இடையிலான தட்பவெப்ப மாறுதலுக்குக் காரணம் இங்கிலாந்தின் தெற்கிலும், கிழக்கிலும் பனி மூடி இருப்பது தான் என்று வானிலை அறிவிப்பாளர்கள் கூறினர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு கெண்ட மாநிலத்தில் உள்ள மேன்ஸ்ட்டனில் வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அதே சமயம் நார்ஃபோல்க்கில் உள்ள வடக்கு கடற்கரையில் வேபோர்னில் 6.4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

மேற்கு இலண்டனில் உள்ள கியூ கார்டன்ஸில் உள்ள அதிகபட்ச வெப்பநிலை 14.1 டிகிரி செல்சியசாகவும் சனிக்கிழமை 19.6 டிகிரி அதிகரித்திருந்தது. வெயிலின் கொடுமை தாங்காத பிரிட்டன் மக்கள் வார இறுதி நாட்களில் ஸஸ்ஸெக்ஸில் உள்ள பிரைட்டன் கடற்கரையை நாடிச் செல்கின்றனர்.

மற்ற கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. திங்கட்கிழமை அவர்கள் வேலைக்குத் திரும்பிய போதும் 19 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

No comments:

Post a Comment