flashvortex.

Saturday, October 29, 2011

சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி

முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டைபிரிடாப்பி என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமோல்டோ  முசோலினி   மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.

கல்வி

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை,  சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாராசின்  பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.


இராணுவத்தில் பணிபுரிதல்

 

1902ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு  குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது.

உலகின் அதிசய நீர்ப் பாலம் (படங்கள் இணைப்பு)

கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம்.

ஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?

ஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது.

இது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.

பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.

1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன்  வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கண்களை பாதுகாப்பதற்கு......

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.

கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும். சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள்.

Tuesday, October 25, 2011

சர்வாதிகாரி கடாபி


   லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்தவர்  சர்வாதிகாரி கடாபி . இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது, பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில், உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது. 1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார்.
           இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார். 1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார்.

ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் கோயில்

இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும்.
            லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இது இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது.

அதிவேகமாக இயங்கும் "கம்ப்யூட்டர் சிப்':

கம்ப்யூட்டர்களில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர்  சிப்பை அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார்.
இந்த சிப்பை பயன்படுத்தினால், இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது. அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர்.


உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்தவர் மாவீரன் அலெக்சாண்டர்

 உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரரானகத் திகழ்ந்தவர்  அலெக்சாண்டர். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை  ஆவார். 

இவருடைய தந்தையான ஃபிலிப்  பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப் படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். பின்பு, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார்.

அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவராக இருந்தார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருண்டார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். 

தந்தை இறந்த போது அலெக்சாண்டருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாண்டருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாண்டர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாண்டருக்கு ஆசிரியராக இருண்டு கல்வி கற்பித்தார்.

கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருண்டு விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாண்டர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார். மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது. அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாண்டர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது,  அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாண்டரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது.

அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாண்டர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாண்டர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாண்டரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். 

இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும்படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது. அலெக்சாண்டர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைண்டு, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார்.

அதன் பின்பு, அலெக்சாண்டர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப்படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாண்டர் முற்றுகையிட்டுக் கொண்டிருண்டபோதே, அலெக்சாண்டருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாண்டருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாண்டராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாண்டர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார். டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாண்டர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார்.

இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாண்டர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாண்டர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாண்டர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். 

மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாண்டரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாண்டர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார். இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாண்டருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இண்டுகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார்.

ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாண்டர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார். பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாண்டர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாண்டர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். 

அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார்.

கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாண்டர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்த போதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாண்டர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். 

பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாண்டர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை. அலெக்சாண்டர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாண்டரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் இவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.  


சிந்திக்க சில நிமிடங்கள்

 இயற்கையாகவே கறையான்களுக்கு கண் தெரியாது.ஆனாலும் சில இடங்களில் 40அடி உயரமுள்ள புற்றுக்களைக் கூட எழுப்புகின்றன. இயற்கையிலேயே காது கேட்காத ஒரே விலங்கு பாம்பு.இது ஓசைகளை அதிர்வின் மூலம் உனர்கின்றது. ஒட்டகத்தினால் ஒலியை எழுப்ப முடியாது. ஆனால் இவைகள் எல்லாம் எவ்வளவு திறமையாக தொழிற்படுகின்றன. 
       இவ்விலங்குகள் எல்லாம் இயற்கையாகவே இப்படிப் படைக்கப்பட்டுள்ளன.  அதனால் அவை சூழலுக்கேற்ப இசைவாக்கம் பெற்று விட்டன. ஆனால் ஒரு மனிதனுக்கு பார்வையின்மை அல்லது காது கேளாமை அல்லது வாய் பேச முடியாமை போன்ற குறைபாடுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால்...............? !பெரும்பாலானோர் “எம்மால் பேச முடியாது என முடங்கி விடுகின்றனர்.  அவ்வளவு ஏன்?  அங்கவீனம் ஏதும் அற்றவர்களே முயற்சி இன்மை, ஆர்வம் இன்மை ,அவநம்பிக்கை என்பவற்றால் தம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த தவறுகின்றனர்.


பாடசாலைகளில் தமிழ்ப்பாட சித்தி வீதத்தில் வீழ்ச்சி

 மாணவர்களின் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனைக் கட்டமாக க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை அமைகின்றது. இதில் சித்தி அடைவதன் மூலமே எதிர்காலத்தை சிறப்பான முறையில்அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் பலர் இதில் சித்தியடையத் தவறுகின்ற நிலை காணப்படுகின்றது.
    
         கடந்த காலங்களில் க.பொ.த.சாதாரணதரத்தில் கணிதம் என்ற பாடம் மட்டுமே சித்தியடைவதற்கு பிரச்சனைக்குரிய பாடமாக இருந்தது. தாய்மொழியை தமிழாகக் கொண்டிருக்கும் யாழ்பாணத்தில் அனேக மாணவர்கள் தமிழ்ப் பாடங்களில் 'C' தரச் சித்திக்கு மேற்படவே பெற்று வந்தனர்.

மாவீரன் நெப்போலியன் வாழ்கையில் நடந்தவை


மாவீரன் நெப்போலியன் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி 1769ம் ஆண்டு கோர்ச்சிக்கா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்லோ பொனபார்ட், இவரது தாயார் லெற்றீசியா ரமூளினு ஆவார்.

1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான்.

விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ?

நாம் அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கிடுகளை அவதானித்திருப்போம் அல்லவா?

உதாரணத்திற்கு நாம் கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்யும்போது அலைபேசியில் அழைப்பு வந்தால் உடனே கணனி ஒலிபெருக்கியில் ஒரு குறுக்கீடு உண்டாவதை பார்த்திருப்போம்.......


இவை ஒரு பயங்கர பிரச்சனை என்று கூறுவதற்கு இல்லை.எனினும் இதே பிரச்சனை விமானத்தில் வந்தால் எவ்வாறு இருக்கும் தெரிமா?

பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்.........

21ம் நூற்றாண்டில் தாதியத்தின் எழுச்சி



  ஆதிகாலத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் தாதியம் இருந்துள்ளது.பண்டைய காலத்தில் ஆதிகால மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர். சுகாதாரப் பிரச்சனை, குடிநீர்பிரச்சனை, நோய்களை எதிர்கொள்தல் போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளால் அவதியுற்றனர்.எனவே தொற்றுநோய்களில் இருந்து விடுபடவும் சுகாதாரமான வாழ்கை முறையினை ஏற்படுத்திக் கொள்ளவும் முனைந்தனர். ஆகையால் தமது வாழ்வாதாரத்தில் வளர்ச்சி படிமுறைகளை நோக்கி பயணித்தனர். இப்பயணத்தின் பக்கபலமாகஇருந்ததே தாதியம். முற்காலத்தில் இது ஒரு தொழிலாக காணப்படவில்லை மாறாக இது ஒரு கலையாகவே காணப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தாதியத்தின் தேவை அதிகரித்தமையால் அது தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்து விஞ்ஞானரீதியில் பல படிமங்களாக வளர்ந்து வைத்தியத்துறையும் தாதித்துறையும் வளர்ச்சி கண்டது.


சுழல்பந்தின் நாயகன் முத்தையா முரளிதரன்

பல சாதனைகளின் நாயகனாகத் திகழும் முத்தையா முரளிதரன் 1972.4.17ம் திகதி பிறந்தார். இவர் இலங்கையணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரும், மலையகத் தமிழரும் ஆவார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை எடுத்து உலக சாதனை புரிந்த முதல் வீரர் என்ற பெருகைக்குரியவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

    கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன் பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமைதாங்கி இருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளி அதே நேரம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னான்டோவின் ஆலோசனையின் படி சுழல்பந்து வீச்சை தொடங்கினார்.
     1990 - 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் பாட்டா ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற விருதினைப் பெற்றார். 1991ம் ஆண்டில் தமிழ் யூனியன் துடுப்பாட்ட கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட  வாழ்வை ஆரம்பித்தார்.


அம்மா

ஈரைந்து மாதங்கள் எனை தாங்கி பூமியிலே

ஈன்றெடுத்த தெய்வம் நீ...
பாலுட்டி சீராட்டி உன் உதிரத்தையேதந்து காத்தாய் நீ
என் மழலை மொழி கேட்க
எத்தனை காலம் காத்திருந்திருப்பாய்
என்னை வளர்த்திட நீ பட்ட
துயரங்கள்தான் எத்தனை ஆயிரம்
தாயே
உந்தன் நினைவுகளால்
ஏங்கித் தவிக்கின்றேன்
எப்போது எனை தேடி
வருவாய்..........

அம்மா

                                          நான் கருவறையில்
                                         இருந்த காலம் தொடக்கம்
                                         உன் இதயம் எனும்
                                        அன்புச் சிறையில்
                                        அடைபட்டு இருக்கின்றேன்
                                         உன் அன்புச் சிறையில்
                                        இருந்து வெளிவர நான்
                                        விரும்பியதுமில்லை
                                        விரும்பப்போவதுமில்லை
                                        எப்பொழுதும்..........