flashvortex.

Wednesday, March 28, 2012

யாழ். இணுவில் பகுதியில் இனம் காணப்பட்ட விசித்திர விலக்கினம் - படங்கள் இணைப்பு


யாழ் இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் இருந்து யானை முகம் கொண்ட உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலங்கின எலும்புக்கூடுகள் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன்கோவிலில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள தோட்ட வெளியிலேயே இந்த உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தோட்டக்காணியில் மலசலகூடம் ஒன்று அமைப்பதற்ககாக ஆறு அடி நீளமும் நான்கு அடி அகலம் கொண்ட ஒரு குழி வெட்டப்பட்ட நிலையில், 4-4.5 அடிவரை தாழத்திற்க்கு வெட்டப்பட்ட நிலையில் யானைமுகமும் மற்றும் தும்பிக்கை போன்ற வடிவமும் கொண்ட உருவம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உருவம் சம்பந்தமாக முடிவான முடிவுகள் தெரியவராத போதிலும் பெரும் எண்ணிக்கையானவாகள் இன்று மாலையில் பார்த்து வருகின்றார்கள்.

இது குறித்து ஒரு சில முதியவர்கள் கருத்து தெரிவிக்கையில், காரைக்கால் சிவன்கோவில் வரலாற்றுக்காலத்திற்க்கு உட்பட்ட ஆலயம் எனவும் அந்நியர் ஆட்சியில் இந்தப் பகுதியில் இருந்த சிலை அன்றைய அந்நியர்களினால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் கற் பாறைகள் காணப்படுவதற்க்கான வாய்ப்புகள் இல்லையெனவும் சுமார் 8 முதல் 10 அடி ஆழத்திற்க்கு கிடங்கு வெட்டப்படும் சந்தர்ப்பத்திலேயே காணப்படலாம் எனவும் தெரிவிக்கின்றாகள்.

No comments:

Post a Comment