flashvortex.

Monday, March 19, 2012

தமிழீழமே மூச்சு: மெரினா கடற்கரையில் திரண்ட தமிழர்கள் முழக்கம்

சிறீலங்கா அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தகோரியும் இன்று சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியினை நடத்தியுள்ளார்கள்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இன்று பிற்பகல் மெரினா கடற்கரையில் பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு போராடிய கண்ணகி சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில்
“பன்னாட்டு விசாரணையினை நடத்து”,
“தனித்தமிழீழத்திற்கான வாக்கெடுப்பினை நடத்து”,

“60ஆண்டு கால போராட்டத்தை கருத்தில்கொண்டு தமிழீழத்தை தனிநாடாக அறிவி”,
“இலங்கை அரசு ராஜபக்சமீது சர்வதேச விசாரணை நடத்து”,
“இலங்கை ஒரு தோல்வியுள்ள சனநாயக நாடு அங்கே நீதி கிடையாது,நல்லிணக்க ஆணையகத்தை நாங்கள் புறக்கணிக்கின்றோம்”
போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் அலையென  மெரினா கடற்கரையில் திரண்டார்கள். இடையில் விடுதலை பறை அடித்து சிங்கள அரசிற்கு எதிரான கோசங்களை மக்கள் எழுப்பினார்கள்.
இன் நிகழ்வில் பேராசிரியர் தீரன், தோழர் தியாகு,ஓவியர் வீரசந்தணம்,நல்லை சத்தியா,கவிஞர் தாமரை, அற்புதாம்மாள், மகேஸ்வரி,மே 17 இயக்கஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு     தற்போதைய சிறீலங்காவின் நிலைதொடர்பிலும் சிறீலங்கா அரசுமீது எவ்வாறான அழுத்தங்களை பன்னாடுகள் கொடுக்கவேண்டும் என்றும் அதற்கு தமிழகமக்களின் எழுச்சி எவ்வாறு செயல்வடிவம் கொடுக்கவேண்டும் என்பது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது. இறுதியில் கோசங்களை எழுப்பியவாறு   பேரணியாக சென்று   ஆர்பாட்டத்தினை நிறைவு செய்தனர்.
இந்த  ஆர்ப்பாட்ட பேரணியின்  நிறைவாக சிறீலங்கா அரசுமீது பன்னாட்டு போர்குற்ற புலனாய்வு விசாரணை தேவை என்பதையும்   தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும்  வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment