flashvortex.

Tuesday, March 27, 2012

30 ஆண்டு போரில் இறந்து போன வீரர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு


ஜேர்மனியின் லூட்ஸென் நகரில் முப்பதாண்டு போரில் இறந்து போன 75 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 1632ம் ஆண்டில் நடந்த லூட்சென் போரில் ஜேர்மனியர் ஸ்வீடன் வீரர்களைக் கொன்று புதைத்தனர்.


இந்தப் போருக்கு ஜேர்மனியின் உரோமன் கத்தோலிக்கத் தளபதியான ஆல்பிரட் வான் வாலன்ஸ்ட்டீன் தலைமையேற்றார்.

மிகப் பெரிய அளவில் உயிர்ச்தேசத்தை ஏற்படுத்திய இந்தப் போரில் 6500 முதல் 10,000 பேர் மரணத்தைத் தழுவினர். ஸ்வீடன் நாட்டு மன்னர் குஸ்டாவுஸ் அடால்ஃபஸ் என்பவரும் போர்க்களத்தில் படுகாயமுற்று உயிரிழந்தார்.

இந்த இடுகாட்டை கடந்த 2011ம் ஆண்டில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர், இந்த சமாதி 42 சதுர மீற்றர் அகலமும், 1.1 மீற்றர் உயரமும் கொண்டதாக இருந்தது.

இந்த சமாதியை அகழ்ந்தெடுக்க ஓராண்டு காலம் ஆகும். இப்பணியில் ஆறு நிபுணர்கள் ஈடுபடுவர். அகழ்வாராய்ச்சியில் பின்பற்றப்படும் ஆய்வு முறைகளின் படி புதைக்கப்பட்ட வீரர்களின் வயது, காயத்தின் இயல்பு, இறப்புக்கான காரணம் மற்றும் நோய் குறித்து தகவல்கள் அறியப்படும்.

No comments:

Post a Comment