flashvortex.

Tuesday, March 20, 2012

விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே ஆஸ்திரேலியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடத் திட்டம்

இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஜே ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ஜூலியன் அசாஞ்ஜே பிரித்தானியாவில் வீட்டுக் காவலில் உள்ளார் எனினும் வீட்டுக்காவலில் இருந்தும் ஆஸ்திரேலிய செனட் சபைக்கு போட்டியிடும் சாத்தியம் உள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அந்நாட்டு பிரதமர் ஜூலியா கில்லார்ட்டிற்கு எதிராக ஜூலியன் அஸேஞ் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment