flashvortex.

Friday, March 30, 2012

போப்பாண்டவர் - பிடல் காஸ்ரோ வரலாற்று முக்கியத்துவச் சந்திப்பு!


கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவருக்கும் இ கியூபாவின் முன்னாள்  தலைவர் பிடல் காஸ்ரோவுக்குமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு  நிகழ்ந்துள்ளது.  கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள போப்பாண்டவருக்கும்இ அரசியலில் இருந்து விலகிஇ ஓய்வு எடுத்து வரும் கியூபா முன்னாள் தலைவர் காஸ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு  தலைநகர் காவானாவில் நேற்று நடைபெற்றது.

சுமார் 30 நிமிட நேரம் இடம்பெற்ற இந்த உரையாடலின் போதுஇ பல்வேறு விடயங்கள் குறித்தும் இருவரும் பரஸ்பரம் உரையாடியதாகவும்இ கத்தோலிக்கத் திருச்சபையின் நடவடிக்கைகள் குறித்து காஸ்ட்ரோ ஆர்வமாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



உரையாடலின் போதுஇ  போப்பாண்டவர்கள் என்ன செய்வார்கள் என  பிடல் காஸ்ட்ரோ கேட்கஇ  'வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வார்கள்' எனச் சிரித்தவாறே பதிலளித்த போப் பெனடிக் தொடர்ந்து கத்தோலிக்த் திருச்சபையின் சேவைகள் குறித்து சுருக்கமாக விளக்கியதாகவும் தெரியவருகிறது.

உரையாடலின் போது போப்பாண்டவர் கியூபாவிற்கு தான் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் இ கியூபா மக்கள் தமக்கு அளித்த  வரவேற்பை கண்டு தான் வியப்பதாகவும் குறிப்பிட்டார். பிடல்காஸ்ரோ உரையாடுகையில்இ அன்னை தெரசாஇ மற்றும் மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் போல்இ ஆகியோரை புனிதர்களாவே தான் மதிப்பதாகவும்இ தெரிவித்தார்.

மதரீதியான ஈடுபாடு அற்றிருந்த பிடல் காஸ்ரோ  அன்மைக்காலத்தில் கத்தோலிக்க மதத்தின் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி வருதாக சில கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

போப்பாண்டவரின் கியூபா விஜயத்தின் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதியோரங்களில் குழுமி நின்று அவரை வரவேற்றனர். போப்பாண்டவர்  கியூபாவில் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment