flashvortex.

Thursday, March 22, 2012

இலினாய்ஸ் மாகாணத்திலும் மிட் ரூம்னி வெற்றி

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் குடியரசு கட்சியின் மிட் ரூம்னி வெற்றி பெற்றுள்ளார். அவர் குடியரசு கட்சியின் ரிக் சாண்ட்ரோமை விட 12% வீத வாக்குகள் அதிகம் பெற்று இவ்வெற்றியை பெற்றுள்ளர்.

இதன் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஒபாமாவை எதிர்த்து மிட் ரூம்னி களமிறங்குவது, ஓரளவு உறுதியாகியுள்ளது.
இலினாய்ஸ் தேர்தல் மூலம் கிடைக்கப்பெற்ற 54 வெற்றிப்புள்ளிகளையும் அடுத்து, மிட் ரூனி இதுவரை 563 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். ரிக் சாண்டோரம் 263 புள்ளிகளை பெற்றுள்ளார்.

ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு குடியரசு கட்சியின் வேட்பாளர் 1,144 ஆசனப்புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மீதமுள்ள மாநில வாக்கெடுப்புக்கள் முடிவடையும் வரை தான் பின்வாங்க போவதில்லை. தொடர்ந்து முயற்சிக்க போகிறேன் என ரிக் சாண்டோரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment