flashvortex.

Sunday, March 18, 2012

உக்கிரம் பெறும் இராஐதந்திர போர் - சிறீலங்காவின் பலம் அதிகரிப்பு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரனை தொடர்பில் உறுப்பு நாடுகளின் வாக்குகளை திரட்டுவதில் அமெரிக்காவும் சிறீலங்காவும் தீவிர முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்தரைகள் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.
 
மேற்படி அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்கும் முனைப்புக்களில் சிறீலங்கா பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் 47 உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவினை பெற்றுக் கொள்ள அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா, ரஸ்யா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகள் ஏற்கனவே சிறீலங்காவிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியா இன்னும் சரியான முடிவை எடுக்காமல் மெளனம் காத்து வருகின்றது. 
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 13 ஆபிரிக்க நாடுகளில் சில நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையும், சிலவை எதிரான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளன.
 
முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம். அதாவுல்லாஹ், பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 22ம் திகதி பெரும்பாலும் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சிறீலங்காவிற்கு ஆதரவாக 25 நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆதரவாக 22 நாடும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக சிங்கள நாளேடான திவயின குறிப்பிட்டுள்ளது. 

இதன் ஒரு அங்கமாக தான் அமெரிக்கா தனக்கு ஆதரவு தேடும் நோக்கில் நூற்றுக்கு  மேற்பட்ட இராஐதந்திர அதிகாரிகளை களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment