flashvortex.

Wednesday, November 30, 2011

காதலில் தோல்வி என்றால் என்ன செய்வது..?

Paristamilகாதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் நாமே நம்மை அழித்துக்கொள்வதா..? எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே..
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது

Paristamil
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும். அதனால்தான் `உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ அன்பிருந்தால் துன்பமில்லை” . அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
 

Tuesday, November 29, 2011

பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் 'இம்மார்ட்டல்' என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம்.

பொப் இசை சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் இம்மார்ட்டல் என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் பாடிய 20 பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. வசீகரிக்கும் குரலாலும் அதிரடி நடனத்தாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன்.கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் திகதி 50வது வயதில் இறந்தார். அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மார்ட்டல்(இறவாப் புகழ் கொண்டவன்) என்ற பெயரிலான ஆல்பம் வெளிவந்துள்ளது. 

மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பொதுமக்களின் பார்வைக்காக அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை அமெரிக்க அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் கணித திறமைகள் கொண்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானி. இவர் புள்ளியில் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளில் தனது மாபெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவருக்கு 1921ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐன்ஸ்டீன் தனது 76 வது வயதில் மரணமடைந்தார்.

Monday, November 28, 2011

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்?

முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.

உலகின் மிக ஆபத்தான பறவை

உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் “உலகின் மிக ஆபத்தான பறவை” யாக இடம் பிடித்துள்ளது. விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.

Sunday, November 27, 2011

ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.பறக்கும் பறவை!

உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.பறக்கும் ‘காட்விட்’ (God-wit)என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அலாஸ்காவின்  தெற்கு கடற்கரை பகுதியில், கடந்த 1976ம் ஆண்டு ராபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, “காட்விட்’ என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக்கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின.

Saturday, November 26, 2011

7ம் அறிவு வில்லன் JOHNY TRI NGUYEN எப்படித் தெரிவு செய்யப்பட்டான்?

‘ஏழாம் அறிவு’ படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது. அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது.
 
‘ஏழாம் அறிவு’ படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அத்தகவல்கள் இதோ
 

Friday, November 25, 2011

பிரான்சின் முன்னால் முதற்பெண்மணி மரணம்.

பிரான்சின் காலஞ்சென்ற முன்னால் ஜனாதிபதியான  François Mitterrand இன் மனைவி Danielle Mitterand திங்கள் இரவு காலமாகியுள்ளார். இவருக்கு வயது 87. பரிசின் Hôpital Georges-Pompidou இல் வெள்ளிக்கிழைம  அனுமதிக்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை செயற்கை மயக்க நிலையில் (coma artificiel) வைக்கப்பட்டிருந்தார்.
இவரின் சமூக நல சேவைகளினால் இவர் மிகவும் பிரபலமடைந்திருந்தார். ஜனாதிபதியின் துணைவியார் என்பதால் மட்டுமல்ல இவரது பொது நலத் தொண்டுகளாலும் இவர் முதற்பெண்மணியாகவே திகழ்ந்தார் என அரசியற் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Friday, November 4, 2011

தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு்ப்பதால், குடும்பத்தை இழக்கும் இன்றைய தலைமுறை

 
Paristamil
பலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதிய முக்கியத்துவம் வழங்க மறுத்துவிடுகின்றனர்.

 
வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே அல்லது தொழில் ரீதியான பணியிலேயே குறியாக இருந்தால் அவர்களின் குடும்ப, சமூக வாழ்க்கை ஆட்டம் காணலாம்.ஒருவர் உழைக்கக்கூடிய பருவத்தில் குடும்ப வாழ்க்கைக்காக அல்லது வாழ்க்கைக்கா அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.
 
"குறிப்பிட்ட வயதிலேயே உழைக்க முடியும். அதனால் உழைக்கும் பருவத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்" என சிலர் கூறுகின்றனர்.

Thursday, November 3, 2011

காதல் சின்னம்


அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.

தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்"  தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால  இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.

இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ராநகரில் அமைந்துள்ளது.

தாஜ் மஹால் 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள்கல்களால் 1631 ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள் , பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் , பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள் .

இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றயநான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.

முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தொன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும் .

தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது .

அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும் , கலைகளையும் , வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும் , வெள்ளை மாஃபிள் கட்டிடமும் , நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும் , கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது. 

ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது , அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.

தாஜ்மஹால் முகப்பில் "குறான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.

ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்“.

அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் பேரரசருமான ஷாஜஹான் வரலற்றுடன் இருண்ட கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாஜ் மஹால் கட்டி நிறைவு பெற்றதும் அங்கு வேலைசெய்த அனைவர் கைகள் வெட்டப்பட்டதாகவும் முதன்மை கட்டிட கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது மாதிரியான ஓர் நினைவாலயம் வேறு யாராலும் கட்டப்படுவதை தடுப்பதற்கு ஷாஜ ஹான் இட்டகட்டளை இது எனவும் சொல்லப்படுகின்றது .

ஷாஜஹான் கட்டளைப்படி அந்நாட்களில் தாஜ்மஹால் கட்டிட வரைபட உருவாக்கத்திலும் கட்டிட வேலைத்திட்டத்திலும் பல இந்துசமய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அத்துடன் இஸ்லாமிய சாயலும் இந்துக்கள் கைவண்ணமும் ஒன்றுசேர்ந்த இந்த அரிய கலைப்படைபின் பின்னால் பல கலைஞர்களின் பங்கு இருந்துள்ளது.

1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.


மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும் , உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.

முதல் சூப்பர் ஸ்டார் ?

தமிழ் திரையுலகின், "முதல் சூப்பர் ஸ்டார்' என, வர்ணிக்கப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர் நினைவு நாளை அனுசரிக்க திரையுலகினர் யாரும் வராததது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, பாலக்கரை, எடத்தெரு, கான்மியான் மேட்டுத்தெருவில் வசித்த கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் - மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910 மார்ச் 1ம் தேதி எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்தார். அப்பகுதியில் உள்ள ஜெபமாலை மாதா துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு வரை படித்த அவர், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1934ம் ஆண்டு பவளக்கொடி என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட, 14 படங்களில் நடித்து பிரபலமானார்.

இன்றைய காலகட்டத்தில், ஒரு படம் 10 நாட்கள் தியேட்டரின் முழு கொள்ளளவுடன் ஓடினாலே வெற்றிப்படம் என கூறி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் வர்ணிக்கப்படும் தியாகராஜ பாகவதர் நடித்த, ஹரிதாஸ் என்ற படம் 4 தீபாவளிகளையும் தாண்டி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற தியாகராஜ பாகவதர், உடல் நலக்குறைவால், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இறந்தார். திருச்சியின் மற்றொரு மைந்தனாக திரையுலகில் வலம் வந்த எம்.ஆர். ராதா ஏற்பாட்டில், தியாகராஜ பாகவதர் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்துடன் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா!

Paristamilசர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் இரண்டாம் கட்டமாக, சீனா நேற்று, ஆளில்லா விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும்,"மிர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு' போட்டியாக, சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலையத்தை, 2020க்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, "லாங் மார்ச் 2எப்/ஜி' என்ற ஏவுகணை மூலம், "தியான்காங்-1' அல்லது "விண்ணுலக சொர்க்கம்' என்ற விண்வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகரமாக விண்ணில் நிறுவப்பட்டது.

புதிய விண்கலம்:இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று, "ஷென்÷ஷாவூ-8' என்ற ஆளில்லா விண்கலம், "லாங் மார்ச் - 2 எப்' என்ற ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 9 மீ., நீளமும், 2.8 மீ., விட்டமும், 8 டன் எடையும் கொண்ட இந்த விண்கலம், பலமுறை திருத்தி வடிவமைக்கப்பட்டு, பின் ஏவப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து வானில், 343 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும்.

எய்ட்ஸ் நோயை 15 நிமிடத்தில் சிறிய சிப் மூலம் அறியலாம்

எய்ட்ஸ் நோய் தாக்கி யுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும். 'எம் சிப்' மூலம் இதை கண்டறிய முடியும். இது 'கிரீடிட்' கார்டு போன்று இருக்கும். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக் கப்படுகிறது. இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித் துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனுடன் மோதி அழிந்துபோகும் வால் நட்சத்திரம்:


அண்டவெளியிலும் மற்றும் நமது பால்வெளியிலும் பல நூற்றுக்கணக்கான வால் நட்சத்திரங்கள் வலம்வந்துகொண்டு இருக்கின்றன. அவை உண்மையாகவே ஒரு விண்கல்லாகவே நோக்கப்படுகிறது. அவை பயணிக்கும் வேகத்தால் அக் கற்களில் இருந்து தூசித்துகள்கள் கிளம்பி பின்நோக்கிச் செல்வதால் அக் கல்லுக்கு ஒரு வால் இருப்பதுபோலத் தோற்றமளிக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்கஞ்சொல்லுகின்றனர்.



இதுபோல ஒரு வால் நட்சத்திரம் சமீபத்தில் சூரியனோடு மோதி அழிந்துள்ளது. இவ்வாறு நடக்கும் காட்சிகள் அபூர்வம் அதனை மனிதனின் கண்களால் பார்க்கவும் முடிவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் துல்லிய கமராக்களின் கண்களில் இருந்து இவை தப்பிவிடுமா என்ன ? 

டைனோசர்கள் அழிந்தது விண்கற்களாலா?

பூமியில் சுமார் 1300 வகையான `ஊர்வன’ இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், டைனோசர்.ஒரு காலத்தில் இது பூமியின் முக்கிய உயிரினமாகத் திகழ்ந்தது. இவ்வளவு பெரிய உயிரினம் எப்படி அழிந்துபோனது என்பது இன்றைக்கும் புதிராக உள்ளது. ஏறக்குறைய 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலவித் திரிந்திருக்கின்றன டைனோசர்கள். அப்போது இவைதான் பூமியின் மிகப் பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் `இரிடியம்’ என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பசியின் காரணமாக பல மைல் தூரம் மலை ஏறிய டைனோசர்கள்

அதிக பசியின் காரணமாக டைனோசர்கள் பல மைல் தூரம் மலை ஏறியிருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
உலகில் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினம் டைனோசர். 16 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த இனம் ஆறரை கோடி ஆண்டுகள் முன்பு அழிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் போது டைனோசர்களின் படிமங்கள், எலும்புகள், பற்கள் போன்றவை கிடைத்து வருகின்றன.
அமெரிக்காவின் உடா மாநில அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் பற்கள், எலும்புகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வின் போது கிடைத்த பற்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

தாவர எண்ணெயில் இயங்கும் விமானம்: சீன நிறுவனம் சாதனை

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் சீனாவில் முதன் முறையாக தாவர எண்ணெயில் இயங்கும் விமான சேவை நேற்று பரிசோதிக்கப்பட்டது.
பூமி வெப்பமாவதைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக விமானங்களுக்கு தாவர எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவும் இணைந்து ஆல்கா அல்லது ஜட்ரோபா கொட்டையிலிருந்து தாவர எரிபொருள் கண்டுபிடிப்ப தற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 

சர்வாதிகாரி கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன?

கொல்லப்பட்ட கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன? அவர் என்னவெல்லாம் செய்தார்? என்ன பேசினார்? இந்த விபரங்கள் தற்போது விலாவாரியாக வெளியாகி உள்ளன.
தலைநகர் ட்ரிபோலியை போராளிப் படைகள் கைப்பற்றியபோது, ஆகஸ்ட் 21ம் தேதி அங்கிருந்து தப்பி ஓடினார் கடாபி. தனது நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர்கள், நெருங்கிய உறவினர்கள், விசுவாசிகள், மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றுடன் சிறிய வாகனத் தொடர் ஒன்றில் அவர் இரவோடு இரவாக ட்ரிபோலியை விட்டு தப்பிச் சென்றார்.
கடாபியுடன் சென்ற குழுவில் ஒருவர், தாவோ. இவர் கடாபியின் நெருங்கிய உறவினரும்கூட.
தற்போது கைது செய்யப்பட்டு, மத்திய உளவுத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள தாவோதான், கடாபியின் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை வெளியுலகுக்கு முதன்முதலில் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டு மீடியாக்கள் அடங்கிய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் பேசுவதற்கு இவர் அனுமதிக்கப்பட்டார்.   அப்போது தாவோ கூறிய விபரங்கள்தான் கடாபியின் இறுதித் தினங்கள் பற்றி தற்போது உள்ள ஒரேயொரு பதிவு.

ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் சீசர்

அகஸ்ட்டஸ் (செப்டெம்பர் 23, கிமு 63 – ஆகஸ்ட் 19, கிபி 14) ரோமப்பேரரசை  ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர்   கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஒக்டேவியஸ் கிமு 27 ஆம் ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்ட பின்னர் கிமு 43ல் ஒக்டேவியஸ்,மார்க் ஆன்ரனி, மார்க்கஸ் ஏமிலஸ் லெப்பிடஸ்  ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக் கொண்டு ஒரு இராணுவச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.. இது வரலாற்றாளர்களால் இரண்டாவது முக்கூட்டணி  (Second Triumvirate) என அழைக்கப்படுகின்றது. இம் முக்கூட்டணியின் ஒரு உறுப்பினராக அகஸ்ட்டஸ், ரோமையும் அதன் மாகாணங்கள் பலவற்றையும் ஆண்டு வந்தார். காலப்போக்கில், அதிகாரப் போட்டி காரணமாக இம் முக்கூட்டணி சிதைந்து போயிற்று. லெப்பிடஸ் நாடுகடத்தப்பட்டார். கிமு 31 ஆம் ஆண்டில் ஒக்டேவியனுடன் ஆக்டியப் போரில்  ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மார்க் ஆன்டனி தற்கொலை  செய்து கொண்டார். முக்கூட்டணியி சிதைவுக்குப் பின்னர், ரோமக் குடியரசு. ரோமக் குடியரசைப்  பெயரளவில் மீளமைத்த அகஸ்டஸ், அரசாங்க அதிகாரத்தை செனட் அவைக்குக் கொடுத்திருந்தாலும், நடைமுறையில் தானே அதிகாரம் முழுவதையும் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக இடம்பெற்ற படிப்படியான நடவடிக்கைகள் மூலம் குடியரசாக இருந்த ரோம், ஒரு தனி மனிதனின் ஆளுகைக்கு உட்பட்டுப் பின்னர் ரோமப் பேரரசு ஆனது.