flashvortex.

Tuesday, March 20, 2012

சீனாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலின் விலை ஆறு சதவீதமும், டீசலின் விலை 7 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு முறை சீனா எரிபொருள்களின் விலையை உயர்த்தியிருந்தது.
அதே நேரம் விலைவாசி உயர்வு விகிதம் சீனாவில் குறைந்துவரும் நிலையில் இந்த விலையேற்றத்தின் பாதிப்பு ஒரளவு தாங்கக் கூடியதாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விலைவாசி கட்டுக்கடங்காமல்போனால் அதன் காரணமாக சமூக கொந்தளிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க சீனா கடுமையாக முயன்றுவருகிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனாவின் பெட்ரோலிய இறக்குமதி கடந்த பத்து ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment