flashvortex.

Friday, March 9, 2012

சாவகச்சேரியில் மூன்று படை வீரர் சுட்டுக்கொலை - அச்சத்தில் பிரதேசத்தை விட்டு வெளியேறிய மக்கள்

இராணுவப் படைவீரர் ஒருவர், சக படைவீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வீரர் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மூன்று இராணுவப்படை வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சாவகச்சேரியில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றின் பாதுகாப்புகடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என இராணுவ ப்பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அச்சத்தில் பிரதேசத்தை விட்டு வெளியேறிய மக்கள்
யாழ்.சாவகச்சேரி முருகன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று படைவீரர்கள் பலியாகியதை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள படை முகாமைச் சூழ படையினர் குவிக்கப்பட்டு இருப்பதோடு முகாமிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் எனக் கருதியே இந்த இடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறிவருகின்றனர்.

இதேவேளை படைமுகாமில் உள்ள இராணுவப் பரிவினரை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் இராணுவத்தினருக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment