ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கூட்டத் தொடரில், சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் பட்சத்தில் அதனை எதிர் கொள்ள சிறீலங்கா தயாராகி வருகிறது.
இந்நிலையில் தமக்கு வலுசேர்க்கும் முகமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்துள்ளதாக ஜெனிவாவிற்கு சென்றிருக்கும் சிறீலங்காவின் குழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள், சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணை தொடர்பில் தாம் பிற நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாவும் தெரவித்துள்ளனர்.
சிறீலங்காவி்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியா இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பித்தக்கது.
Friday, March 9, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment