 நாட்டிற்கும், ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவிற்கும் பாதுகாப்பு வேண்டி அனைத்து கோயில்களிலும் விசேட பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அவசரமான உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைப் பரிந்துரையிலிருந்து நாட்டையும் ஜனாதிபயையும் காப்பாற்றுவதற்கே இந்த உத்தரவை அரசு விடுத்துள்ளது. 'இது அரசின் அவசர உத்தரவு' என்ற அம்சத்துடன் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சகல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதனடிப்படையில் கிராமசேவகர்களும் சமுர்ததி உத்தியோகத்தர்களும் தமது பகுதிகளில் மக்களை அழைத்துச் சென்று அப்பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நாட்டையும் ஜனாதிபதியையும் காப்பாற்றும்படி பிரார்த்திக் கொண்டு மணி எழுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பௌத்த விகாரைகளில் பிரித் பாராயணம் இடம்பெற வேண்டும் என்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிப்பு ஆராதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளி வாசல்களில் விசேட தொழுகை நடத்த வேண்டும் என்றும் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரசின் பெயரில் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள ஆலயங்களின் மணிகளை எழுப்பக் கூடாது என்றும் மணி ஒலி எழுப்புவது தண்டணைக்குரிய குற்றம் என்றும் சிறீலங்கா படையினர் உத்தரவிட்டு விசேட கண்காணிப்புக்களில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை சிறீலங்காவிற்கு எதிரான பிரேரனை அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரான சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை நோக்கும் போது, சர்வதேசத்தின் பிடிக்குள் வசமாக மாட்டிக் கொண்டதாகவே உணர முடிகின்றது.
ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தனது பொது நிகழ்ச்சிகள் யாவைவும் இடைநிறுத்தி கண்டியில் ஒய்வெடுப்பதாக நேற்றைய செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தோம். வீர வசனம் பேசி திரிந்தவர்கள் ஓடி ஒளியும் போது, தோல்வியை நெருக்கிவிட்டதாகவே பொருள்படும். |
No comments:
Post a Comment