சூரியனின் மேல்மட்டத்தில் உருவான சூரியப் புயல், நேற்று அதிகாலை, பூமியின் காந்தப் புலத்தைத் தாக்கியது. எனினும் எதிர்பார்த்தபடி, பூமியில் உள்ள மின் தொகுப்பு உள்ளிட்டவற்றில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படும். கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக சீற்றத்துடன் உள்ளது.சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.நேற்று அதிகாலை, இந்திய நேரப்படி 4.15 மணிக்கு பூமியைத் தாக்கிய சூரியப் புயல், கடந்த ஐந்தாண்டுகளில் மிகப் பெரியதாக இருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.
ஆனால், கடந்த ஜனவரி 22ம் தேதி பூமியைத் தாக்கிய சூரியப் புயலைப் போல இதுவும் வலுவிழந்து காணப்பட்டது.அதேநேரம் புயலின் தாக்கத்தால், பூமியில் காந்தப் புலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால், பூமியில் உள்ள மின் தொகுப்புகள் உள்ளிட்ட மின்சார அமைப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மிகப் பெரிய அளவிலான சூரியப் புயல் 1859ல் பூமியைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்த விஞ்ஞானிகள், இப்புயல்கள் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டனர்.
Saturday, March 10, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment