flashvortex.

Saturday, March 10, 2012

நைஜீரியாவில் கடத்தப்பட்ட இத்தாலியர் கொலை? பிரிட்டன் மீது இத்தாலி அதிருப்தி

நைஜீரியாவில் கடத்தப்பட்டிருந்த இத்தாலியரின் மரணத்திற்கு, இங்கிலாந்தே பொறுப்பேற்க வேண்டும் என இத்தாலிய அரசு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கிரிஸ் மெக்மனாஸ் மற்றும் ஃபிரான்ஸ்கோ லமொலினாரா எனும் இரு பொறியியலாளர்கள் கடந்த வருடம், நைஜீரியா இராணுவ குழுக்களால் கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் பிரித்தானிய, இத்தாலி நாட்டிலிருந்து அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் ஆபத்தான சூழ்நிலை கருதி, அதிரடி இராணுவ நடவடிக்கை மூலம் அவர்களை மீட்டெடுக்குமாறு இங்கிலாந்து அதிபர் டேவிட் கெமரூன் கட்டளையிட்டிருந்தார். அதன் படி இரகசிய மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும், அது தோல்வியில் முடிந்தது. கடத்தப்பட்ட இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இத்தாலியிடம் கலந்தாலோசிக்காது பிரிட்டன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டதாக இத்தாலிய அரச பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இருவர் கடத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடம் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்ததை அடுத்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment